தமிழகம் முக்கியச் செய்திகள்

அப்டேட் கேட்ட ரசிகர்கள்! அறிக்கை விட்டு அட்வைஸ் செய்த அஜித்!!

சமீபக்காலமாக அஜித் ரசிகர்கள், விரைவில் திரைக்கு வரவிருக்கும் வலிமை படத்தின் அப்டேட் கேட்டு பல இடங்களில் கேள்விகளை எழுப்பி வந்தது சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில், இது குறித்து அஜித் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில்..

என் மீதும் என் படங்களின் மீதும் அபரிமிதமான அன்புக் கொண்டு இருக்கும் எதையும் எதிர்பாராத அன்பு செலுத்தும் என் உண்மையான ரசிகர்களுக்கும், மக்களுக்கும் என் மனமார்ந்த வணக்கம்.

கடந்த சில நாட்களாக என் ரசிகர்கள் என்ற பெயரில் நான் நடித்து இருக்கும் “வலிமை” சம்பந்தப்பட்ட Updates கேட்டு அரசு, அரசியல், விளையாட்டு மற்றும் பல்வேறு இடங்களில் சிலர் செய்து வரும் செயல்கள் என்னை வருத்தமுற செய்கிறது. முன்னரே அறிவித்தபடி படம் குறித்த செய்திகள் உரிய நேரத்தில் வரும். அதற்கான காலத்தை, நேரத்தை நான் தயாரிப்பாளருடன் ஒருங்கிணைந்தது நிர்ணயம் செய்வேன். அதுவரை பொறுமையுடன் காத்திருக்கவும். உங்களுக்கு சினிமா ஒரு பொழுது போக்கு மட்டுமே, எனக்கு சினிமா ஒரு தொழில். நான் எடுக்கும் முடிவுகள் என் தொழில் மற்றும், சமூக நலன் சார்ந்தவை. நம் செயல்களே சமூகத்தில் நம் மீது உள்ள மரியாதையைக் கூட்டும்.

இதை மனதில் கொண்டு ரசிகர்கள் பொது வெளியிலும், சமூக வலைத்தளங்களிலும் கண்ணியத்தையும், கட்டுப்பாட்டையும் கடைப்பிடிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். என் மேல் உண்மையான அன்பு கொண்டவர்கள் இதை உணர்ந்து செயல்படுவார்கள் என நம்புகிறேன்.

என அஜித் தனது ரசிகர்களுக்கு வேண்டுகொள் விடுத்துள்ளார்.

Advertisement:

Related posts

வரலாற்றில் முதல் முறையாக காகிதமில்லா பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்!

Saravana

நாட்டின் முதல் உற்பத்தி தொழிற்சாலையை சென்னையில் அமைக்கிறது அமேசான்!

Karthick

”ஆன்மீக அரசியலுக்கு வந்தால் கமலை ஏற்போம்”- இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத்!

Jayapriya

Leave a Comment