இந்தியா முக்கியச் செய்திகள்

கொரோனா தடுப்பூசி செலுத்த ஆன்லைனில் முன்பதிவு செய்வது எப்படி?

18 வயதுக்கு மேற்பட்டவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்கான ஆன்லைனில் பதிவு இன்று மாலை 4 மணிக்கு தொடங்குகிறது.

இந்தியாவில் வரும் 1ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. இந்நிலையில் தடுப்பூசி செலுத்தி கொள்ள “கோவின்” என்ற இணையத்தளத்தில் அல்லது ஆரோக்ய சேது மற்றும் உமாங் சேது என்ற ஆப்
மூலம் முன்பதிவு செய்ய வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது.

இதனால் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்கு பலரும் நள்ளிரவு 12 மணி முதல் முன்பதிவு செய்ய முயன்றுள்ளனர். ஆனால், அனைவருக்கும் முன்பதிவு செய்வதற்கான பக்கமே காண்பிக்கவில்லை. இந்நிலையில், இன்று மாலை 4 மணி முதல் கோவின், ஆரோக்ய சேது, உமாங் சேது ஆகிய செயலிகள் மூலம் கொரோனா தடுப்பூசிக்கு முன்பதிவு செய்து கொள்ளலாம் என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

கோவின் இணைய பக்கத்தில் பதிவு செய்யும் முறை:

1.cowin.gov.in என்ற இணையத்திற்கு செல்லவும்.

2.உங்களுடைய மொபைல் எண்ணை டைப் செய்யவும்

3.அடுத்து உங்களது மொபைல் எண்ணுக்கு வரும் OTP எண்ணை உள்ளிடவும்

4.பின்னர், உங்களுடைய விவரங்களை பதிவு செய்யவும்.

5.அதன்பிறகு, கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்வதற்கான நேரம், விருப்பப்படும் மையம் மற்றும் தேதியை குறிப்பிடவும்

ஆரோக்ய சேது செயலி மூலம் பதிவு செய்ய

1.ஆரோக்ய சேது செயலியின் முகப்புத் திரையில் இருக்கும் கோவின் என்பதை கிளிக் செய்யவும்.

  1. பின்னர் அதில் தடுப்பூசி பதிவு என்பதைத் தேர்ந்தெடுத்து உங்கள் தொலைபேசி எண்ணை உள்ளிடவும்.

3. அடுத்து தோன்றும் பக்கத்தில், உங்கள் மொபைல் எண்ணிற்கு வரும் ஓடிபியை உள்ளிடவும்

4. அதன்பிறகு, கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்வதற்கான நேரம், விருப்பப்படும் மையம் மற்றும் தேதியை குறிப்பிடவும்

ஒரு செல்போன் எண்ணில் இருந்து 4 பேர் வரை கொரோனா தடுப்பூசிக்கு பதிவு செய்யலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Advertisement:

Related posts

54 காந்தங்களை விழுங்கிய சிறுவன்: காரணமறிந்த மருத்துவர்கள் அதிர்ச்சி!

Jayapriya

திருநங்கையாக மாறிய பிரபல ஆடை வடிவமைப்பாளர்; இணையத்தில் குவியும் பாராட்டுகள்!

Jayapriya

போரில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பாரட்டுவிழா!

Karthick