குற்றம்

சேலம் அருகே 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து, தம்பதி தற்கொலை

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து, தம்பதி தற்கொலை செய்து கொண்டனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள புங்கவாடி கிழக்கு காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன். இவருக்கு சத்தியா என்கிற மனைவியும், அபினயா (12) என்கிற மகளும், சங்கீத் (வயது 11) என்கிற மகனும் உள்ளனர். வேல்முருகன் காதல் திருமணம் செய்து கொண்டதால் மனைவி சத்தியாவிற்கும் மாமியார் தனலட்சுமிக்கும் அடிக்கடி சொத்து தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சத்தியாவிற்கும் மாமியார் தனலட்சுமிக்கு மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது தகாத வார்த்தையால் சத்தியாவை தனலட்சுமி திட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த அவர், நேற்று மாலை வீட்டிற்கு வந்த கணவரிடம் நடந்தவற்றை கூறியுள்ளார்.

இதைக்கேட்டு மனமுடைந்த வேல்முருகனும் தங்களுக்கு ஆதரவாக யாரும் இல்லையென்று தனது இரண்டு குழந்தை, மனைவியையும் இருசக்கர வாகனத்தில் அழைத்து கொண்டு மஞ்சினி அருகே உள்ள காட்டுப்பகுதிக்கு சென்று குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு கணவன், மனைவி இருவரும் குடித்துள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திலேயே சத்தியா உயிரிழந்தார். உயிருக்கு போராடி கொண்டிருந்த குழந்தைகள் போன் மூலம் தங்களது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த உறவினர்கள் மற்றும் ஆத்தூர் ஊரக போலீசார் வேல்முருகனை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால், அவர் வழியிலேயே உயிரிழந்தார். குழந்தைகள் இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குடும்பத்தினருடன் ஏற்பட்ட சொத்து தகராறில் கணவன் மனைவி இருவரும் விஷம் குடித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement:

Related posts

மசாலா பொருட்கள் வியாபாரி வீட்டில் மிளகாய் பொடி தூவி பணம் கொள்ளை!

Jayapriya

தொழிலதிபர் வீட்டில் ரூ. 40 லட்சம் மதிப்பிலான நகை கொள்ளை: திருடனுக்கு வலைவீச்சு

Gayathri Venkatesan

கடன் தொல்லையால் விஷம் அருந்தி தற்கொலை செய்த இளைஞர்!

Jeba

Leave a Comment