உலகம் முக்கியச் செய்திகள்

இந்தியாவிற்கு 4.5லட்சம் ரெம்டெசிவிர் மருந்துகளை வழங்குவதாக அமெரிக்கா உறுதி

இந்தியாவில் கொரோனா பரவல் வேகமெடுத்துள்ள நிலையில், இந்தியாவிற்கு 4.5லட்சம் ரெம்டெசிவிர் மருந்துகளை வழங்குவதாக அமெரிக்கா உறுதியளித்துள்ளது.

இந்தியாவில் தற்போது கொரோனா 2வது அலை வேகமெடுத்துள்ளது. இதனால் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் ஆக்சிஜன், ரெம்டெசிவிர் உள்ளிட்ட மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தியாவில் கொரோனா சிகிச்சைகாக அவசர கால அடிப்படையில் பயன்படுத்தப்படும் ரெம்டெசிவிர் மருந்தை தயாரிக்க உரிமம் பெற்ற 7 இந்திய மருந்து ஆலைகள் தங்கள் உற்பத்தியை அதிகத்திற்கும் நிலையில் மேலும் உற்பத்தி ஆலைகளை விரிவுபடுத்துவதற்கான உரிமத்தை வழங்குவதாக அமெரிக்க மருந்து நிறுவனமான கிலியட் தெரிவித்துள்ளது.

மேலும் கொரோனா சிகிச்சைக்கு அவசரமாக தேவைப்படும் 4.5 லட்சம் ரெம்டெசிவிர் மருந்துகளையும் வழங்குவதாக உறுதியளித்துள்ளது. இது குறித்து பேசிய கிலியட் நிறுவன தலைமை வணிக அதிகாரி ஜொகானா மெர்சியர் “இந்தியாவில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளிக்க நாங்கள் துணை நிற்கிறோம். இருதரப்பின் இந்த முயற்சியினால் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் ரெம்டெசிவிர் மருந்தின் நன்மைகளை விரைவில் பெறுவர்” என கூறியுள்ளார். கிலியட் நிறுவனத்தின் வாலண்டியர் லைசன்சிங் புரோகிராம் 2020ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதன் மூலம் 60-க்கும் மேற்பட்ட நாடுகளில் 23 லட்சம் மக்கள் பயனடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. சர்வதேச அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்தையும் இந்தியா இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளது.

Advertisement:

Related posts

ஜாமீனில் வந்து பெண்ணின் தந்தையை சுட்டுக் கொன்ற வன்கொடுமை வழக்கு குற்றவாளி!

Jeba

லண்டன் பேஷன் வீக் ஷோவில் இடம்பெற்ற லடாக்கின் பாரம்பரிய ஆடைகள்!

Gayathri Venkatesan

திமுக ஆட்சிக்கு வந்தால் பாலாற்றின் குறுக்கே கூடுதலாக தடுப்பணைகள் கட்டப்படும்: மல்லை சத்யா

Karthick