உலகம்

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 கோடியை கடந்தது!

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 கோடியை கடந்துள்ளது.

உலகில் கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் முதன்மையானதாக அமெரிக்கா இருந்து வருகிறது. இங்கு கடந்த மார்ச் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று நாடு முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனை அடுத்து நோய் பாதிப்பை தடுக்க அமெரிக்க அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும் அங்கு பாதிப்பின் எண்ணிக்கை கடந்த 8 மாதங்களாக அதிகரித்து வருகிறது. இதனிடையே நோய் பாதிப்பை கட்டுப்படுத்த பரிசோதனைகளை துரிதப்படுத்தியுள்ளதோடு ஃபைசர் தடுப்பு மருந்தை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கும் பணியிலும் அந்நாட்டு அரசு ஈடுபாட்டு வருகிறது.

இந்நிலையில் அந்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 கோடியை கடந்துள்ளது. இது தொடர்பாக ஜான் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் அமெரிக்காவிகாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20,007,149 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இந்த தொற்றால் 346,408 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவித்துள்ளது.

Advertisement:

Related posts

99.9% ஒளியை உள்வாங்கும் 16 ஆழ்கடல் கருப்பு மீன் இனங்கள் கண்டுபிடிப்பு!

Nandhakumar

கொரோனாவுக்கு எதிரான போர் இன்னும் முடிவடையவில்லை; பொதுமக்களுக்கு பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் எச்சரிக்கை!

Dhamotharan

54 காந்தங்களை விழுங்கிய சிறுவன்: காரணமறிந்த மருத்துவர்கள் அதிர்ச்சி!

Jayapriya

Leave a Comment