உலகம்

விடுமுறைக்காக கடத்தல் நாடகம் ஆடிய இளைஞர்; வேலை பறிபோன பரிதாபம்

அமெரிக்காவில் அலுவலத்தில் விடுமுறைக்காக கடத்தல் நாடகம் ஆடிய இளைஞர் கையும் களவுமாக பிடிபட்டார். அத்துடன் அவரது வேலையும் பறிபோனது.

அமெரிக்காவின் அரிசோனாவில் உள்ள கூலிட்ஜ் என்ற நகரத்தைச் சேர்ந்த 19 வயதான பிராண்டன் சோல்ஸ் என்பவர் அந்தப்பகுதியில் இருக்கும் டயர் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். சில நாட்களுக்கு முன்னர் அவர் வாயில் துணி திணிக்கப்பட்டு, கைகள் இரண்டும் ஒன்றோடு ஒன்று டெல்ட்டால் கட்டப்பட்ட நிலையில் தொழிற்சாலை இருக்கும் பகுதிக்கு அருகில் கீழே கிடந்துள்ளார். அப்போது அந்த வழியே வந்தவர்கள் அவரை பார்த்து போலீஸுக்கு தகவல் அளித்தனர்.

இதையடுத்து அங்கு வந்த போலீஸார் பிராண்டன்னிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது அவர், தன்னை இருவர் கடத்தி சென்றதாக கூறினார். அதற்கு காரணமாக தனது தந்தை பலரிடம் கடன் வாங்கியுள்ளார். அதனால் அவரை மிரட்டுவதற்காக என்னை யாரே கடத்தி சென்றிருக்கலாம் என கூறியுள்ளார். இதையடுத்து, அந்த பகுதியில் இருக்கும் கேமராக்களை ஆராய்ந்ததில் அவர் கடத்தி செல்லப்பட்டதற்கான ஆதாரங்கள் எதுவும் போலீஸாருக்கு கிடைக்கவில்லை. அத்துடன் அவரது உடலில் கடத்தி செல்லப்பட்டதற்கான எந்த அடையாளங்களும் காணப்படவில்லை. இதுபோலீஸாருக்கு மேலும் சந்தேகத்தை கொண்டு வந்தது.

இதனால், அவர்கள் அடுத்தகட்ட விசாரணையை துவக்கினர். இதில் பிராண்டன் தன்னை யாரும் கடத்தவில்லை எனவும், வேலைக்கு செல்ல மனமில்லாமல் விடுமுறை எடுப்பதற்காக கடத்தல் நாடகம் ஆடியதாகவும் ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீஸார் அவரை எச்சரித்து அனுப்பி வைத்தனர். ஆனால், விடுமுறை எடுக்க பிராண்டன் கடத்தல் நாடகம் ஆடியதை தெரிந்து கொண்ட தொழிற்சாலை நிர்வாகத்தினர் அவரை வேலையை விட்டு நீக்கம் செய்தனர்.

Advertisement:

Related posts

பாகிஸ்தானில் ஆக்ஸிஜன் சிலிண்டர் பற்றாக்குறையால் 7 கொரோனா நோயாளிகள் மூச்சுத்திணறி உயிரிழந்த பரிதாபம்!

Saravana

கொரோனா தடுப்பூசி விநியோகம்: பணக்கார, ஏழை நாடுகளுக்கு இடையே ஏற்றத்தாழ்வு!

Ezhilarasan

அமெரிக்க வெள்ளைமாளிகை மீனா ஹாரிஸூக்கு விடுத்த எச்சரிக்கை!

Niruban Chakkaaravarthi