உலகம் முக்கியச் செய்திகள்

ரூ. 700 கோடி மதிப்பிலான அமெரிக்காவின் மருத்துவ உபகரணங்கள் இந்தியா வருகை!

அமெரிக்கா அனுப்பிய, 740 கோடி ரூபாய் மதிப்பிலான ஆக்சிஜன் சிலிண்டர்கள், மருந்து மூலப் பொருட்கள் உள்ளிட்டவை டெல்லி வந்தடைந்தன.

கொரோனா வைரசின் இரண்டாவது அலையால், இந்தியா கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. நாட்டில் ரெம்டெசிவிர் மருந்து, ஆக்சிஜன் உள்ளிட்டவற்றின் தட்டுப்பாட்டால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில், மருந்து பொருட்கள், மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்டவற்றின் தேவை அதிகரித்திருப்பதால், ரஷ்யா, இங்கிலாந்து, சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட உலக நாடுகள் இந்தியாவுக்கு அவற்றை அளித்து வருகின்றன.

அந்த வகையில், 440 ஆக்சிஜன் சிலிண்டர்கள், கொரோனா தொற்று கண்டறிவதற்கான 1 லட்சத்து 84 ஆயிரம் உபகரணங்கள், 20 ஆயிரத்துக்கும் அதிகமான ரெம்டெசிவிர் மருந்துகள், தடுப்பூசிக்கான மூலப் பொருட்கள், ஒரு லட்சம் N95 முகக்கவசங்கள் உள்ளிட்டவற்றை அமெரிக்கா, இந்தியாவுக்கு அனுப்பியுள்ளது. இதன் மொத்த மதிப்பு 740 கோடி ரூபாயாகும். அமெரிக்காவின் இந்த உதவிப் பொருட்களுடன் அமெரிக்க விமானம், இன்று காலை டெல்லி வந்தது.

கொரோனா தொற்றால் அமெரிக்கா கடுமையாக பாதிக்கப்பட்ட போது, இந்தியா தங்களுக்கு உதவியதாகவும், கொரோனா தொற்றின் இரண்டாவது அலையால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவுக்கு தற்போது, அமெரிக்கா உதவுவதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

Advertisement:

Related posts

திமுக தேர்தல் அறிக்கை மார்ச் 11ஆம் தேதி வெளியீடு

Gayathri Venkatesan

பெங்களூருவில் காரை கடித்துக்குதறிய வங்கப் புலி; வைரலாகும் வீடியோ!

Saravana

திமுக கூட்டணியில் இருந்து பல கட்சிகள், அதிமுக கூட்டணிக்கு வர வாய்ப்பு: அமைச்சர் ஜெயக்குமார்

Saravana