இந்தியா முக்கியச் செய்திகள்

உத்தர பிரதேசம் உன்னாவில் 2 பட்டியலின சிறுமிகள் மர்ம மரணம்!

உத்தர பிரதேச மாநிலத்தில் பட்டியலின சிறுமிகள் இருவர் மர்மமான முறையில் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் உன்னா மாவட்டத்தில் பாபுகாரா கிராமத்தில் 13 மற்றும் 16 வயது மதிக்கத்தக்க இரண்டு சிறுமிகள் கடந்த 17ஆம் தேதி வயல்வெளியில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தனர். மற்றொரு 17 வயது சிறுமி அதே இடத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தார்.

மூன்று சிறுமிகளும் 17ஆம் தேதி மதியம் மாட்டுக்கு தீனி சேகரிக்க வயலுக்குச் சென்றுள்ளனர். ஆனால், அன்று மாலை இருள் சூழும் வரை அவர்கள் வீட்டுக்குச் செல்லவில்லை. இதனால் தேடிச் சென்றபோதுதான் மூவரும் சுய நினைவில்லாத நிலையில் வயலில் கண்டெடுக்கப்பட்டனர். அவர்களின் கழுத்து இறுக்கப்பட்டு, வாயில் இருந்து நுரை தள்ளிய வண்ணம் இருந்தனர்.

உடனடியாக அருகிலுள்ள நர்சிங் ஹோமுக்கு அழைத்துச் சென்ற நிலையில், அங்கிருந்த மருத்துவர் பரிசோதிக்க மறுப்பு தெரிவித்துவிட்டார். அதன்பிறகு அசோகா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பரிசோதித்த மருத்துவர்கள் இரண்டு சிறுமிகள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். ஆபத்தான நிலையில் இருந்த மூன்றாவது சிறுமிக்கு முதற்கட்ட சிகிச்சை அளித்து உன்னாவ் மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பினர்.

இதுதொடர்பாக சிறுமிகளின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் கொலை, தடயங்களை மறைத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அடையாளம் தெரியாத நபர்கள் மீது உத்தர பிரதேச காவல் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

மூவரின் உடலில் காயங்கள் எதுவுமில்லை எனவும், போராடியதற்கான தடயங்களும் கண்டறியப்படவில்லை எனவும் குறிப்பிட்ட போலீசார், உயிரிழப்பிற்கு விஷம் காரணமாக இருக்கும் என சந்தேகிப்பதாகவும் கூறினர். ஆனால், சிறுமிகளின் சகோதரர், அவர்களின் கை மற்றும் கால்கள் கட்டப்பட்டிருந்ததாகக் கூறினார். இதனை மறுத்த லக்னோ ஐஜி லஷ்மி சிங், சிறுமிகளின் சகோதரர் அவ்வாறு கூறுகிறார் என்றாலும், கட்டப்பட்டிருந்தனர் என்பதை இதுவரை உறுதிசெய்ய முடியவில்லை என்றார்.

இந்த நிலையில் சிறுமிகள் இருவரது உடலும் அவர்களுக்கு சொந்தமான வயலில் புதைக்கப்பட்டது. அப்பகுதியில் காவல் துறையும் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர். மரணம் தொடர்பாக இரண்டு பேரிடம் காவல் துறை விசாரணை நடத்தி வருகிறது.

Advertisement:

Related posts

பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைப்பதற்கான திட்டம் இல்லை- மத்திய அரசு!

Jayapriya

காவிரி -குண்டாறு திட்டத்திற்கு அடிக்கல் நாட்டும் முதல்வர்

Jeba

நீட் தேர்வில் வெற்றிபெற்று மறைந்த தந்தையின் கனவை நிறைவேற்றிய கிராமப்புற மாணவி!

Jeba