இந்தியா செய்திகள் முக்கியச் செய்திகள்

‘நான் வெஜ் பீட்சா’ வழங்கிய உணவகத்திடம் ரூ. 1 கோடி நஷ்டயிடு கேட்கும் உ.பி. பெண்!

உத்தரப் பிரதேம் மாநிலத்தில் பெண் ஒருவர், தனக்கு அசைவ பீட்சாவை மாற்றி வழங்கிய தனியார் உணவகத்திடம் ஒரு கோடி ரூபாய் நஷ்டயிடு வழங்கக்கோரி வழக்கு தொடர்ந்துள்ளார்.

உத்தரப் பிரதேம் மாநிலம் காசியபாத் பகுதியைச் சேர்ந்தவர் தீப்பாளி. இவர் 2021ஆம் ஆண்டு மார்ச் 21ஆம் தேதியன்று, தன் வீட்டருகே இருக்கும் ஒரு தனியார் பீட்சா உணவகத்தில், வெஜ் மஷ்ரூம் பீட்சாவை ஆர்டர் செய்துள்ளார். ஆனால் மாறுதலாக இவருக்கு நான் வெஜ் பீட்சா, ஹோம் டெலிவரி செய்யப்பட்டுள்ளது.

சைவ உணவு பழகத்தை தீவிகமாக பின் தொடர்ந்து வரும் தீப்பாளிக்கு, இது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் அவர் உடனே அந்நிறுவனத்தின் கஸ்டமர் சர்வீஸிக்கு தொலைபேசியில் அழைத்து இந்த சம்பவம் குறித்து புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து, அந்த தனியார் உணவகத்தின் மேலாளர், தீப்பாளியை, தொடர்புக் கொண்டு அச்சம்பவம் தொடர்பாக மன்னிப்புக் கோரியும், அவர் குடும்பத்தினர் அனைவருக்கும் இலவசமாக பீட்சா வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார். இதனை ஏற்காத தீப்பாளி, தனது மத பழகவழகத்தை புண்படுத்தும் விதமாக அந்த உணவகம் நடந்து கொண்டதாகக் கூறி, நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அவர் தாக்கல் செய்திருந்த மனுவில், தன்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய அந்த தனியார் உணவகத்திடம் இருந்து ஒரு கோடி ரூபாய் நஷ்டயிடு வழங்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த டெல்லி மாவட்ட நுகர்வோர் குறைதீர் நிவாரண ஆணையம், இது சம்பவம் தொடர்பாக அந்த தனியார் உணவகம் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு, வழக்கை வரும் மார்ச் 17ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

Advertisement:

Related posts

இங்கிலாந்தை மிரட்டும் புதியவகை கொரோனா; இந்தியாவில் இன்று அவசர கூட்டம்!

Jayapriya

போக்குவரத்து காவலரை தாக்கிய மக்கள்: சமூக வலைத்தளத்தில் வைரலான வீடியோ

Niruban Chakkaaravarthi

கிர் பூங்காவின் முதல் பெண் காவலரால் எடுக்கப்பட்ட புகைப்படம்: மத்திய அமைச்சர் பாராட்டு!

Dhamotharan