இந்தியா குற்றம் செய்திகள் முக்கியச் செய்திகள்

சிறுமி பாலியல் வழக்கில் 3 பேருக்கு 20 ஆண்டு சிறை!

உத்தர பிரதேசத்தில் 15 வயது சிறுமியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் மூன்று பேருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து மஹோபா மாவட்ட கூடுதல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மஹோபா நகரில் 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் மூன்று நபர்கள் சேர்ந்து 15 வயது சிறுமியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மூன்று மாதம் வரை அச்சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் வல்லுறவில் ஈடுபட்டுள்ளனர். இதில் அச்சிறுமிக்கு கருத்தரித்திருக்கிறது.

பின்னர் ஒரு நாள் அந்த சிறுமி அவர் குடும்பத்திடம் இந்த சம்பவம் குறித்து தெரிவித்துள்ளார். இதையடுத்து, அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில், அந்த மூன்று பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கு மஹோபா மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது இந்த பாலியல் வன்கொடுமை வழக்கில் ஈடுபட்ட அந்த மூன்று நபர்களும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டு, அவர்களுக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. மேலும் அவர்கள் மூவருக்கும் தலா, ரூ. 32,000 அபராதமும் விதிக்கப்பட்டது.

Advertisement:

Related posts

கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தார் நல்லகண்ணு!

Karthick

“நாராயணசாமி ஆட்சியில் ஊழல்” – பிரதமர் மோடி குற்றச்சாட்டு

Saravana Kumar

சட்டமன்றத் தேர்தல் விருப்ப மனு: அதிமுக முக்கிய அறிவிப்பு!

Nandhakumar