பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு, மத்திய அரசின் வரி விதிப்பு தான் காரணம், என தமிழக நிதித்துறைச் செயலாளர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை துணை முதல்வர் பன்னீர்செல்வம் நேற்று தாக்கல் செய்தார். அதில் புதிய காப்பீடு திட்டம், பயிர்க்கடன் தள்ளுபடிக்கு நிதி ஒதுக்கீடு என பல முக்கிய அம்சங்கள் இடம்பெற்றிருந்தன.
இடைக்கால பட்ஜெட் தாக்கலுக்கு பின் சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது தமிழகத்தின் கடன் வாங்கும் அளவு, மத்திய அரசின் வரையறுக்கப்பட்ட அளவிற்குள் இருப்பதாக கிருஷ்ணன் தெரிவித்தார்.
மேலும், தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி நேர்மையாக இருக்கும் என்று கூறிய நிதித்துறைச் செயலாளர், மாநில மொத்த கடன் ஆனது, 15வது நிதிக்குழு அளித்த குறியீடுக்குள் தான் உள்ளதாக விளக்கம் அளித்தார். பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு மாநில அரசு காரணம் இல்லை என்றும், மத்திய அரசின் வரிவிதிப்புத்தான் காரணம் என்றும் நிதித்துறைச் செயலாளர் கிருஷ்ணன் தெரிவித்தார்.
Advertisement: