இந்தியா முக்கியச் செய்திகள்

டெல்லி போராட்டம் குறித்து ஐநா மனித உரிமைகள் ஆணையம் கருத்து!

டெல்லியில் 73வது நாளாக விவசாயிகள் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடி வருகின்றனர். இந்நிலையில், ஜக்கா-ஜாம் எனும் நெடுஞ்சாலை மறியல் இயக்கத்தினை போராட்டத்தின் ஒரு பகுதியாக முன்னெடுத்துள்ளனர்.

டெல்லி, உத்தரப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்டில் இந்த சாலை மறியல் நடைபெறாது என விவசாய சங்கம் அறிவித்திருந்தாலும், டெல்லியில் சுமார் 50 ஆயிரத்திற்கும் அதிகமான காவலர்களும், தண்ணீர் பீரங்கிகளும் குவிக்கப்பட்டுள்ளன. மேலும், டெல்லியில் மண்டி ஹவுஸ், ஐடிஓ மெட்ரோ ரயில் நிலையங்கள் தற்காலிகமாக மூடப்படுள்ளன. சம்யுக்த் கிசான் மோச்சா எனும் விவசாய அமைப்பு இந்த போராட்டத்திற்கான அறைகூவலை விடுத்துள்ளது.

இந்நிலையில், “டெல்லியில் போராடும் விவசாயிகள் மற்றும் அரசு மிகுந்த கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். அமைதியாக கூடுவதற்கு அனைவருக்கும் உரிமை உள்ளது. அவர்களுக்கான பாதுகாப்பு இணையத்திலும் மற்றும் பொதுவெளியிலும் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.” என ஐநா மனித உரிமைகள் ஆணையம் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:

Related posts

முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி தான்; கூட்டணியில் உள்ளவர்களுக்கும் இது பொருந்தும்: அமைச்சர் ஜெயக்குமார்

Saravana

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கு: 250 பக்க அறிக்கை தயார்!

Jayapriya

சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க இலங்கையிடம் இந்தியா வலியுறுத்தல்!

Saravana

Leave a Comment