தமிழகம் முக்கியச் செய்திகள்

பிரச்சார வாகனத்தில் ஏறி உதயநிதி ஸ்டாலினுக்கு முத்தம் கொடுத்த போதை வாலிபர்!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் தேர்தல் பரப்புரையின்போது, மதுபோதையில் பிரச்சார வாகனத்தில் ஏறி உதயநிதி ஸ்டாலினுக்கு முத்தம் கொடுத்த நபரால் சலசலப்பு ஏற்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விடியலை நோக்கி ஸ்டாலின் என்ற பிரச்சார பயணத்தை இரண்டு நாட்களாக மேற்கொள்ளவுள்ள உதயநிதி ஸ்டாலின் முதற்கட்டமாக இன்று கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உளுந்தூர்பேட்டை சின்னசேலம் சங்கராபுரம் ஆகிய பகுதிகளில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார் அப்போது சங்கராபுரம் பேருந்து நிலையத்தில் வேனில் நின்றபடி பிரச்சாரம் மேற்கொண்டு இருந்த உதயநிதி முதல்வர் எடப்பாடி ஆட்சி பயணம் குறித்து பேசியதற்கு என் மீது வழக்குப் போட்டாலும் பரவாயில்லை கைது செய்தாலும் பரவாயில்லை கலைஞரின் பேரன் என ஆவேசமாக பேசினார்.

அதேபோல பாரதிய ஜனதா கட்சியினர் தமிழகத்தில் ஒன்றும் செய்ய முடியாது என சூசகமாகப் பேசினார். அதன்பின்னர் கிளம்பிய உதயநிதி ஸ்டாலினின் பிரச்சார வாகனத்தின் மீது கூட்டத்தில் மது போதையில் இருந்த நபர் ஒருவர் அவரது வாகனத்தின் மீது ஏறி அவருக்கு முத்தம் கொடுத்து பாசப் போராட்டத்தில் ஈடுபட்டார் பிறகு அவர் வாகனத்தில் மீதே அமர்ந்தும் சென்றார் இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது

Advertisement:

Related posts

திமுகவின் B டீமாக சசிகலா – தினகரன் செயல்படுகின்றனர்: ஜெயக்குமார்!

Jayapriya

பல தடைகளை எதிர்த்து சனிப்பெயர்ச்சி விழா நல்லபடியாக நடைபெற்றுள்ளது: முதல்வர் நாராணசாமி!

Jayapriya

உச்சபட்ச தயார் நிலையில் முப்படைகள்: பிபின் ராவத் தகவல்!

Jayapriya

Leave a Comment