தமிழகம் முக்கியச் செய்திகள்

ஜெயலலிதாவை புகழ்ந்த உதயநிதி!

ஜெயலலிதா தைரியமாக முடிவு எடுக்கக் கூடியவர் என்று தேர்தல் பரப்புரையில் உதய நிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பேருந்து நிலையம் அருகே விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் பரப்புரையில் ஈடுபட்ட உதயநிதி ஸ்டாலின், தமிழகத்தில் தேனியைத் தவிர அனைத்து நாடாளுமன்ற தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றதை சுட்டிக்காட்டினார். வரும் சட்டமன்ற தேர்தலில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் திமுக வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

ஜெயலலிதா தைரியமான முடிவு எடுக்கக் கூடியவர் என்ற அவர், அவருடைய உயிரிழப்பிலுள்ள மர்மத்தை கண்டுபிடிக்க திமுகவை வெற்றி பெற செய்யவேண்டும் எனவும் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தினார்.

Advertisement:

Related posts

அமைச்சர்கள் மீது ஆளுநரிடம் திமுக 2வது முறை புகார்!

Ezhilarasan

தபால்துறை தேர்வுகளை தமிழில் எழுதலாம்; மத்திய அரசு அறிவிப்பு!

Saravana

பொதுத் தேர்வு அட்டவணை எப்போது வெளியிடப்படும்: அமைச்சர் பதில்!

Nandhakumar

Leave a Comment