செய்திகள் தமிழகம் தேர்தல் 2021 முக்கியச் செய்திகள்

“நான் எந்த வகையிலும் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறவில்லை” – உதயநிதி ஸ்டாலின்!

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ள நிலையில், தற்போது திருவல்லிக்கேணி தொகுதியின் திமுக வேட்பாளர் உதயநிதி ஸ்டாலின், மறைந்த பாஜக மூத்த தலைவர்களை அவதூறாக பேசியதாக கூறி தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கடந்த மார்ச் 31ல் தாராபுரம் தேர்தல் பரப்புரையில் உதயநிதி ஸ்டாலின் மறைந்த பாஜக மூத்த தலைவர்களான அருண் ஜெட்லி மற்றும் சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோரின் மறைவு குறித்தும், அதனுடன் பிரதமர் மோடியை தொடர்புப்படுத்தியும் பேசியதாக குற்றச்சாட்டு மேலெழுந்தது. இந்நிலையில், உதயநிதியின் இந்த விமர்சனமானது தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ள தனிமனித குற்றச்சாட்டுகளை தவிர்க்க வேண்டும் என்கிற நிபந்தனையை மீறியுள்ளதாக பாஜக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இந்த புகாரின் அடிப்படையில் தேர்தல் ஆணையம், இன்று மாலைக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என உதயநிதிக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

இந்நிலையில், “சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜெட்லி குறித்து தாராபுரம் பிரச்சாரத்தில் பேசிய முழு காணொலியை தேர்தல் ஆணையம் கருத்தில் கொள்ளவில்லை, ஒரு பகுதியை மட்டும் எடுத்து நோட்டீஸ் அனுப்பியுள்ளது. எனவே முழு பேச்சின் மொழி பெயர்ப்பை பார்த்து நோட்டீஸ் அனுப்பும் பட்சத்தில் தனது முழுமையான பதிலை தருவதாக” உதயநிதி தேர்தல் ஆணையத்தில் பதிலளித்துள்ளார்.

மேலும், தேர்தல் ஆணையத்தில் பா.ஜ.க தரப்பில் கொடுக்கப்பட்ட புகார் தொடர்பான மனு தனக்கு தரப்படவில்லை, அதை வழங்காமலே நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது
என்றும், எந்த வகையிலும் தான் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறவில்லை, ஏனெனில் எனது பேச்சின் ஒரு பகுதியை எடுத்து தனிப்பட நபரின் வாழ்க்கை குறித்து விமர்சித்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது என்றும் உதயநிதி விளக்கம் அளித்துள்ளார்.

தொடர்ந்து, “அதேவேளையில் எனது தனிப்பட்ட வாழ்க்கையை குறித்தும், தமிழக முன்னாள் முதல்வரும் மறைந்த எனது தாத்தாவாகிய கருணாநிதி குறித்தும், எனது குடும்பத்தார் குறித்தும் பல அவதூறு விமர்சனம் பரப்புரையின்போது எதிர்க்கட்சியினரால் வைக்கப்பட்டது. ஆனால், அது குறித்து நான் புகார் அளிக்கவில்லை. ஏனெனில் விமர்சனத்தை தாங்கும் மனப்பக்குவம் எனக்கு உள்ளது.” எனவும் உதயநிதி தேர்தல் ஆணையத்துக்கு அளித்துள்ள பதிலில் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:

Related posts

அனைத்து மாவட்டச் செயலாளர்களையும் சென்னையில் இருக்க அதிமுக உத்தரவு

Saravana Kumar

மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கொரோனா உறுதி

Saravana Kumar

‘முஜிப்’ உடை, காளி கோயில் வழிபாடு: வங்கதேசத்தில் மோடி!

L.Renuga Devi