தவறான மற்றும் வெறுக்கத்தக்க செய்திகளை அடையாளம் காணும் வழிமுறை குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கும், ட்விட்டர் நிறுவனத்திற்கும் இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பாஜக தலைவர்களில் ஒருவரான வினித் கோயங்கா என்பர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிமன்றம், இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளது. அவர் தாக்கல் செய்திருந்த மனுவில், பிரபலங்களின் பெயரில் போலியாக பல சமூக வலைத்தள கணக்குகள் இயங்கி வருவதாகவும், ஆனால், அவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், தேர்தல் காலக்கட்டங்களில் எதிர்கட்சியினரின் இந்த போலி கணக்குகள் பதம் பார்ப்பதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, விவசாயிகளின் போராட்டம் தொடர்பாக 1,100 ட்விட்டர் கணக்குகளை முடக்கக்கோரி ட்விட்டர் நிறுவனத்திற்கு மத்திய அரசு அழுத்தம் கொடுத்திருந்தது. அதனைத் தொடர்ந்து, சமூக வலைத்தளங்கள், செய்தி அலை ஊடகங்கள் மற்றும் டிஜிட்டல் ஊடகங்களை ஒழுங்குபடுத்த ஒரு வரைவினை அரசு தயாரித்து வருகின்றது.
இந்நிலையில் நேற்று நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய தொழில்நுட்ப துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், இந்தியாவில் அதன் சட்ட திட்டங்களுக்கு ஏற்ப பேஸ்புக், ட்விட்டர் மற்றும் வாட்ஸ்அப் நிறுவனங்கள் செயல்பட வேண்டும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Advertisement: