சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் விசாரணைக்கு இடைக்கால தடைவிதிக்க இயலாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
சாத்தான்குளம் காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட வியாபாரி ஜெயராஜ் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள், சிறப்பு சார்பு ஆய்வாளர் மற்றும் காவலர்கள் என 9 பேர் மீது வழக்கு தொடரப்பட்டு, சிபிஐ அவர்களை கைது செய்தது.
இந்நிலையில் சிறையில் இருக்கும் எஸ். ஐ ரகுகணேஷ் சிபிஐ விசாரிக்கும் ஆவணங்களை வழங்கக்கோரி வழக்கு தொடர்ந்தார். மேலும் சிபிஐ ஆவணங்களை வழங்கும் வரை விசாரணைக்கு இடைக்கால தடைவிதிக்க வேண்டும் என்றும் மனுவில் கேட்டுக்கொண்டார். இந்நிலையில் இந்த வழக்கானது நீதிபதி சதிகுமார் சுகுமரா குரூப் முன்பு விசாரணைக்கு வந்தது. சிபிஐ விசாரணைக்கு இடைக்கால தடைவிதிக்க இயலாது என்றும் இதுதொடர்பாக சிபிஐ பதிலளிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
Advertisement: