தமிழகம்

“அமமுக செயற்குழு கூட்டம் வரும் 25ம் தேதி நடைபெறும்” – டிடிவி தினகரன் அறிவிப்பு

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வருகிற 25 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் இருந்த சசிகலா, ஜனவரி 27 ஆம் தேதி விடுதலையானார். அதற்கு முன்னதாகவே அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தொற்றிலிருந்து குணமடைந்தநிலையில், மருத்துவரின் அறிவுரைப்படி, பெங்குளூருவில் தன்னை தனிமைப்படுத்தி கொண்டார். அதன்பின், கடந்த மாதம் 9ம் தேதி சென்னை வந்தார். தற்போது தியாகராய நகரில் உள்ள இளவரசி வீட்டில் சசிகலா ஓய்வெடுத்து வருகிறார்.

இந்நிலையில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வரும் 25 ஆம் தேதி காலை 9 மணிக்கு காணொலி காட்சி வாயிலாக நடைபெறுகிறது. கட்சியின் துணை தலைவர் எஸ்.அன்பழகன் தலைமையில், காணொலி வாயிலாக 10 இடங்களை இணைத்து நடைபெறும் இந்தக் கூட்டத்தில், செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் அழைப்பிதழுடன் கலந்து கொள்ளுங்கள்” என டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார்.

Advertisement:

Related posts

திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

Saravana

திமுகவில் இருந்து கூட்டணிக்கு தூது வந்தது: கமல்ஹாசன்

Ezhilarasan

”எந்தக் காலத்திலும் ஸ்டாலின் முதல்வராக முடியாது”- ஓ.பன்னீர்செல்வம்!

Jayapriya