செய்திகள் தமிழகம் தேர்தல் 2021 முக்கியச் செய்திகள்

ஜெயலலிதாவின் கனவை நிறைவேற்ற அமமுகவுக்கு வாக்களியுங்கள்: தினகரன்!

தமிழகத்தில் உண்மையான மதசார்பற்ற ஆட்சி அமைய மக்கள் அமமுக கூட்டணியை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் அமமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டிடிவி தினகரன் பரப்புரை மேற்கொண்டார்.

தமிழகத்தில் அனைத்து சமுதாயத்தை சேர்ந்தவர்கள் சகோதரத்துவத்துடன் வாழவும்,தொழில் துறையில் முன்னேற்றம் அடையவும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை அதிகரிக்கவும் தங்கள் கூட்டணியை சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என டிடிவி தினகரன் கேட்டுக்கொண்டார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கனவின்படி இந்தியாவிலேயே தலைசிறந்த மாநிலமாக தமிழகத்தை உருவாக்க அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர்களையும், அதன் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களையும் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என டிடிவி தினகரன் கேட்டுக்கொண்டார்.

இந்த பரப்புரை கூட்டத்தில் அமமுக, தேமுதிக, எஸ்டிபிஐ உள்ளிட்ட கூட்டணி கட்சியினரின் நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர்.

Advertisement:

Related posts

இரண்டு மனைவிகளால் இருண்டு போன குடும்பம்!

Niruban Chakkaaravarthi

நடைபயிற்சியின் போது வாக்கு சேகரித்த மு.க.ஸ்டாலின்!

Saravana Kumar

இலங்கை தமிழர்களின் உரிமைகளுக்கு ஐநா வில் இந்தியா முதலில் குரல் எழுப்ப வேண்டும் : தமிழக எம்பிக்கள் கோரிக்கை

Niruban Chakkaaravarthi