தமிழகம் தேர்தல் 2021 முக்கியச் செய்திகள்

கடனில் தத்தளிக்கும்போது இலவச வாக்குறுதிகளா ? டிடிவி தினகரன்

இலவச வாக்குறுதிகளை கூறி ஆட்சிக்கு வர அதிமுக- திமுக இருகட்சிகளும் ஏமாற்றிடும் செயலுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.


சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக, எஸ்டிபிஐ உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது அமமுக. அக்கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து டிடிவி தினகரன் தொடர்ந்து பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.
நெய்வேலியில் நடந்த அமமுக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பேசிய டிடிவி தினகரன், திமுக ஐபேக் நிறுவனத்தையும், அதிமுக பணமூட்டையை நம்பியும் தேர்தலை சந்திப்பதாக சாடினார். தமிழகம் மிகப்பெரிய அளவில் கடனின் தத்தளித்து கொண்டிருக்கும் போது, இருகட்சிகளும் போட்டி போட்டு இலவச வாக்குறுதிகளை தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது குறித்து விமர்சனம் செய்தார்.

இலவச வாக்குறுதிகளை கூறி ஆட்சிக்கு வர அதிமுக- திமுக இருகட்சிகளும் ஏமாற்றிடும் செயலுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என தினகரன் வலியுறுத்தினார்.
தமிழ் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு திட்டங்கள் அமமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளதை சுட்டிக்காட்டிய டிடிவி தினகரன், வரும் தேர்தலில் தங்கள் கட்சிக்கு ஆதரவு அளித்திடும்படி வேண்டுகோள் விடுத்தார்.

Advertisement:

Related posts

பெரியார் சிலை மீது காவி துண்டு போர்த்திய மர்ம நபர்கள்!

Gayathri Venkatesan

புதுச்சேரி: நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது!

Ezhilarasan

”திமுக, அதிமுகவுக்கு மாற்று, தேமுதிக தான்”- விஜய பிரபாகரன்!

Jayapriya