கோவில்பட்டியில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இறுதிகட்ட பரப்புரையில் ஈடுபட்டார்.
கோவில்பட்டி தொகுதிக்குட்பட்ட இனாம் மணியாச்சி பகுதியில் திறந்தவெளி வாகனத்தில் பேரணியாக சென்று, அவர் இறுதிக்கட்ட பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய டிடிவி தினகரன், அதிமுக ஆட்சி முடிவுக்கு வரும் நாள் வந்துவிட்டதாக தெரிவித்தார். திமுக ஆட்சிக்கு வர துடிப்பதாகவும் அவர் சாடினார்.
சாடிய அவர், ஜெயலலிதாவின் உண்மையான ஆட்சி அமைய அமமுகவிற்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார்.வ.உ.சி.க்கு வெண்கல சிலை அமைக்கப்படும் என்றும் திருமலை நாயக்கருக்கும் சிலை அமைத்து தரப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார். கோவில்பட்டியை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் உருவாக்கப்படும் என்றும் டிடிவி தினகரன் வாக்குறுதி அளித்தார்.
Advertisement: