செய்திகள் தமிழகம் தேர்தல் 2021 முக்கியச் செய்திகள்

திமுக, அதிமுக மற்றும் அமமுக இடையே நடக்கும் யுத்தம்தான் இந்த தேர்தல் – டிடிவி தினகரன்

அதிமுக, திமுக மற்றும் அமமுகவிற்கு இடையே நடக்கும் யுத்தம்தான் இந்த சட்டப்பேரைத் தேர்தல் என விழுப்புரம் தேர்தல் பரப்புரையில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய அவர், திமுக, அதிமுகவை தாக்கி பேச அமமுக மட்டுமே தகுதி உள்ளதாகக் கூறிய டிடிவி தினகரன், அதிமுக, திமுக மற்றும் அமமுகவிற்கு இடையே நடக்கும் யுத்தம்தான் இந்த தேர்தல் எனக் கூறினார்.

அமமுக ஆட்சிக்கு வந்தால், விழுப்புரத்தில் நகை தொழிலாளர்களுக்கு என சிறப்பு நகை தொழிற்பேட்டை அமைக்கப்படும் என்பது உள்ளிட்ட வாக்குறுதிகளையும் பொதுமக்களிடம் டிடிவி தினகரன் அளித்தார். மேலும் நேர்மையான, உண்மையான ஆட்சியை அமமுக அளிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

Advertisement:

Related posts

தமிழகத்தில் தபால் வாக்குப்பதிவு தொடங்கியது!

L.Renuga Devi

அரசு ஊழியர்கள் ஜீன்ஸ், டி ஷர்ட் அணிந்து வர தடை: மகாராஷ்டிர அரசு!

Jayapriya

இலங்கை துணை தூதரகம் முற்றுகை: வைகோ கைது

Niruban Chakkaaravarthi