மேற்கு வங்கம் எதிர் வரும் மே மாதத்தில் சட்டப்பேரவை தேர்தலை சந்திக்க இருக்கக்கூடிய நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிலிருந்து ஒவ்வொரு தலைவரும் விலகி வருகின்றனர். தற்போது அதன் தொடர்ச்சியாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர், தினேஷ் திரிவேதி தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து இன்று அவர் நாடாளுமன்றத்தில் பேசுகையில், மாநிலத்திற்குள் நடக்கும் வன்முறைகள் குறித்து கவலை தெரிவித்து, இந்த வன்முறைகளால் தான் பதற்றமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், இதன் காரணமாக தான் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாகவும் தெரிவித்து தனது ராஜினாமா கடிதத்தினை சபாநாயகருக்கும், துணை குடியரசுத் தலைவருக்கும் கொடுத்துள்ளார்.
இதனால் அதிருப்தியடைந்துள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சி நிலைமையை சூசகமாக எதிர்கொண்டுள்ளது. இந்நிலையில், பாஜகவின் மாநில தலைவர் கைலாஷ் விஜயவர்ஜியா ராஜினாமா செய்த தினேஷை பாஜகவுக்கு வரவேற்பதாக தெரிவித்துள்ளார்.
Advertisement: