இந்தியா முக்கியச் செய்திகள்

மேற்கு வங்கத் தேர்தலில் முறைகேடு செய்ய பாஜக திட்டமிட்டுள்ளது: மம்தா பானர்ஜி

மக்களவைத் தேர்தலைப் போல மேற்கு வங்கத் தேர்தலில் முறைகேடு செய்து வெற்றி பெற பாஜக திட்டமிட்டிருப்பதாக மம்தா பானர்ஜி குற்றம்சாட்டினார்.

மேற்கு வங்க மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. ஆளும் திரிணாமூல் காங்கிரஸ், எதிர்கட்சி வரிசையில் உள்ள பாஜக தனித் தனியாகவும், காங்கிரஸ்-இடதுசாரிகள் மூன்றாவது அணி அமைத்தும் போட்டியிடுகின்றன. மாநிலத்தில் எட்டு கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த நிலையில் முதல் கட்டத் தேர்தல் நடக்கும் தொகுதிகளில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி தீவிர பிரசாரம் மேற்கொண்டார். ஜார்கிராம் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், கோல்டோர் பகுதியில் இரண்டு வாக்குச் சாவடிகளில் முறைகேடு செய்து பாஜக மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றதாக குறிப்பிட்டார். சட்டப்பேரவைத் தேர்தலிலும் அதே போல முறைகேடு செய்ய அவர்கள் திட்டமிட்டிருப்பதாகவும் குற்றம்சாட்டினார்.

இந்த முறை எந்த ஒரு வாக்குச்சாவடியிலும் முறைகேடு நடப்பதை வாக்காளர்கள் அனுமதிக்கக் கூடாது என்றும் அவர் கேட்டுக் கொண்டார். ஒவ்வொருவரும் தவறாமல் தங்களுடைய வாக்குரிமையை செலுத்த வேண்டும் என்றும் மம்தா பானர்ஜி வலியுறுத்தினார்.

Advertisement:

Related posts

மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் கோட்டைக்கே வரலாம்: மு.க.ஸ்டாலின்

Jeba

2011-ம் ஆண்டு வென்ற உலககோப்பையை நினைவு கூர்ந்த சச்சின்!

Karthick

மக்களின் வரி பணத்தை அதிமுக அரசு வீணடித்துள்ளது: திராவிடன் அறக்கட்டளை

Karthick