குற்றம் செய்திகள் தமிழகம் முக்கியச் செய்திகள்

பாலியல் வன்கொடுமை வழக்கில் திருமணமான இளைஞர் கைது!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே காதலர் தினத்தில் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைக் கூறி இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த திருமணமான இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் பழையக்கோட்டை ஊராட்சி பேச்சக்கம்பட்டியைச் சேர்ந்தவர் அருண்பாண்டியன் (27). கட்டடத் தொழிலாளியான இருவருக்கு திருமணமாகி இரண்டு கைக்குழந்தைகள் உள்ளது. இந்நிலையில் தவறான செல்லிடைப்பேசி எண் அழைப்பில் அருகில் உள்ள கிராமத்தில் வசித்து வரும் கூலித் தொழிலாளியின் (20 வயது) இளைய மகளுடன் கடந்த சில நாட்களாக சினேகிதம் கொண்டுள்ளார்.

தான் திருமணம் ஆகாத இளைஞர் என்றும், பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினத்தில் நாம் இருவரும் திருமணம் செய்துகொள்ளலாம் என்றும் ஆசை வார்த்தை கூறியதாக தெரிகிறது. அதனைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி வீட்டில் யாரும்

இல்லாத நேரத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட அருண்பாண்டியன், அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இந்நிலையில் அருண்பாண்டியன் திருமணமானவர் என்பது அந்த இளம்பெண்ணிற்கு தெரிய வர, தனது பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் நடந்தவற்றை கூறியுள்ளார். பின்னர் கடந்த சனிக்கிழமையன்று இளம்பெண் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீ வைத்துக்கொண்டார். பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் பெண்ணை மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு முதலுதவிக்கு பின் மேல்சிகிச்சைக்காக திருச்சி அண்ணல் காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு ஆபத்தான நிலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். பெண்ணின் வாக்கு மூலம் பெற்ற வையம்பட்டி போலீஸார், கடந்த ஞாயிற்றுக்கிழமை அருண்பாண்டியனை கைது செய்து மணப்பாறை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர்.

குற்றவியல் நீதிபதி கே.செந்தில்குமார், வருகின்ற பிப்ரவரி 26ஆம் தேதி வரை சிறையிலடைக்க உத்தரவிட்டதையடுத்துஅருண்பாண்டியன் முசிறி கிளைச்சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.

Advertisement:

Related posts

2021 கல்வியாண்டுக்கான வகுப்புகளை எப்போது துவக்கலாம்? – CBSE பதில்

Niruban Chakkaaravarthi

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முறைகேடு நடப்பதாக மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு!

Niruban Chakkaaravarthi

தாய் – மகள் சடலமாக மீட்கப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த கணவர் கைது!

Jeba

Leave a Comment