ட்விட்டருக்கு போட்டியாக உருவாகியுள்ள koo செயலி இந்திய அள்வில் டிரெண்ட் ஆகி வருகிறது.
உலகம் முழுவது பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்ற ஏராளமான சமூகவலைதளங்கள் உள்ளன. இதில், ட்விட்டரை அரசியல்வாதிகள், திரைப்பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், உள்ளிட்ட பலரும் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், சமீபத்தில் வேளாண் சட்டத்துக்கு எதிராக பதிவிடப்பட்டுள்ள கருத்துக்களை நீக்கக்கோரி மத்திய அரசு ட்விட்டருக்கு அழுத்தம் அளித்தது. இருப்பினும் அந்நிறுவனம் பல காரணங்களை கூறி சில கணக்குகளை நீக்க மறுப்பு தெரிவித்துவிட்டது,
இந்தநிலையில், கடந்த ஆண்டு மார்ச்சில் அறிமுகமான ட்விட்டரை போன்று செயல்படும் ‘கூ’ செயலியை மத்திய அரசு சார்ந்த நிறுவனங்களும், மத்திய அமைச்சர்களான பியுஸ் கோயல், ரவிசங்கர் பிரசாத், மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் உள்ளிட்ட பலரும் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். இது இந்தியாவில் தயாரான செயலி என்பதால் இச்செயலிக்கு ஆதரவாக பலரும் தங்களது கருத்துக்களை ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர். இதன் காரணமாக இந்திய அளவில் கூ செயலி ட்ரெண்டிங்கில் உள்ளது.
Advertisement: