செய்திகள் தமிழகம் முக்கியச் செய்திகள்

தலைமை ஆசிரியர்களின் இடமாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வுக்கு தடை!

ஏப்ரல் 30-க்குள் தலைமை ஆசிரியர்கள் இடமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.

தமிழகத்தில் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பொது இடமாறுதல் கலந்தாய்வு நடத்தாமல், பதவி உயர்வு கலந்தாய்வு நடத்துவதற்கு எதிராக தலைமை ஆசிரியர்கள் பலர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுக்களை விசாரித்த தனி நீதிபதி, தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு கலந்தாய்வுக்கு தடை விதித்தார்.

இறுதி விசாரணையில், அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் இடமாறுதல் கலந்தாய்வை ஏப்ரல் 30-க்குள் நடத்த வேண்டும். அதன் பிறகு தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த வேண்டும் என தனி நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரியும், தடை விதிக்க கோரியும் அரசு சார்பில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி அமர்வு, ஏப்ரல் 30-க்குள் தலைமை ஆசிரியர்கள் இடமாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.

Advertisement:

Related posts

50 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்களை தேர்தல் பணிகளில் ஈடுபடுத்த வேண்டாம்: பள்ளிக் கல்வித்துறை

Niruban Chakkaaravarthi

திருமணம் செய்து வைக்குமாறு சண்டையிட்ட மகனை கொலை செய்த தாய்!

Jayapriya

அதிகரிக்கும் கொரோனா தொற்று; டெல்லியில் பள்ளி, கல்லூரிகள் மூடல்!

Ezhilarasan