தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் புத்தாண்டு தொடர் விடுமுறையால் காலை முதலே ஒகேனக்கல்லில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் கூட்டமாக குவிய தொடங்கியுள்ளனர்.
கடந்த இரு வாரங்களாக தொடர்ந்து ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. கர்நாடகா மாநில சுற்றுலா பயணிகள் மற்றும் சேலம் ஈரோடு நாமக்கல் திருப்பத்தூர் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பயணிகள் ஒகேனக்கல்லில் குவிந்து மெயின் அருவி பகுதிகளில் குளித்தும். தொங்கு பாலத்தில் இருந்து காவிரி ஆற்றின் கரையில் அழகை ரசித்து. பரிசலில் செல்ல நீண்டதூரம் வரிசையில் நின்று பரிசல் பயணம் மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர். வெளி மாநிலம் மற்றும் மாவட்ட சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல் பகுதியின் சிறப்பான மீன் உணவை உட்கொண்டு சுற்றுலாவை இனிமையாக கொண்டாடினர் சுற்றுலா பயணிகள் அதிகரிப்பதால் போலீசார் காவிரி ஆற்று ஓரப் பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
Advertisement: