உலகம் முக்கியச் செய்திகள் விளையாட்டு

ஒலிம்பிக் போட்டிகளைக் காண வெளிநாட்டவருக்கு அனுமதி மறுப்பு!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியைக் காண வெளிநாட்டுப் பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

டோக்கியோவில் வரும் ஜூலை 23-ம் தேதி முதல் ஆகஸ்ட் 8-ம் தேதி வரை ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியில் வெளிநாட்டு வீரர்கள் பலர் கலந்து கொள்ளவுள்ளனர். இந்நிலையில், உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனாவின் இரண்டாவது அலை பரவி வருகிறது. இதன் காரணமாகச் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி மற்றும் சர்வதேச பாரா ஒலிம்பிக் கமிட்டி உள்ளிட்ட அமைப்புகள் கலந்து கொண்டன.

இந்த கூட்டத்தின் முடிவில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியைக் காண வெளிநாட்டுப் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டது. போட்டியைக் காண முன்னதாக டிக்கெட்டுகளை வாங்கிய வெளிநாட்டுப் பார்வையாளர்களுக்குக் கட்டணத் தொகையைத் திருப்பி கொடுப்பதாகவும் போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.

Advertisement:

Related posts

2021 தேர்தலில் போட்டியிடும் அனைத்து கட்சிகளும் வணிகர்களுக்கு ஐந்து தொகுதி ஒதுக்க வேண்டும் என கோரிக்கை!

Jeba

7.5 சதவீத இட ஒதுக்கீடு மூலம் ஏழை மாணவர்களின் மருத்துவ படிப்பு கனவை அதிமுக அரசு நிறைவேற்றியுள்ளது: முதல்வர்!

Karthick

5 முறை ஆட்சியில் இருந்தும் திமுக எதுவும் செய்யவில்லை: முதல்வர் பழனிசாமி

Ezhilarasan