உலகம்

அனைவரும் ஒன்று பட்டு 2021 ஆம் ஆண்டை கட்டியெழுப்புவோம்: ஜோ பைடன் புத்தாண்டு வாழ்த்து!

ஒன்று பட்டு குணம் அடைந்து 2021ஆம் ஆண்டை கட்டியெழுப்புவோம் என்று அமெரிக்க அதிபராக பதவி ஏற்க உள்ள ஜோ பைடன் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் செய்தியில், தேசம் எதிர் கொண்டுள்ள சவால்கள் ஓரே இரவு காணாமல் போய்விடாது என்று தெரிவித்துள்ளார். எனினும், புத்தாண்டு தொடக்கத்தை எதிர்நோக்கிக் காத்திருப்போம் என்றும் கூறி உள்ளார். எதிர்வரும் நாட்கள் நல்லவையாக இருப்பதற்கான சாத்தியங்கள் இருப்பதாக கூறியுள்ள அவர், அதற்கான நம்பிக்கைகள் நிரம்பிய மனதோடு தாம் காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஒரு ஆண்டில் ஏற்பட்ட வலி மற்றும் இழப்புக்குப் பின்னர் நாம் ஒன்றுபட்டு குணம் அடைந்து 2021 ஆம் ஆண்டை கட்டமைப்போம் என்றும் அமெரிக்க மக்களுக்கு ஜோ பைடன் அழைப்பு விடுத்துள்ளார்.

Advertisement:

Related posts

எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தில் மாற்றமா? நாளை அறிவிக்கிறது நேபாள அரசு!

Jayapriya

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி!

Saravana

செளதி அரேபியாவில் 2020 ஆண்டில் 27 பேருக்கு மட்டுமே தூக்கு தண்டனை; மனித உரிமைகள் அமைப்பு தகவல்!

Saravana

Leave a Comment