செய்திகள் தமிழகம் முக்கியச் செய்திகள்

கொரோனா பாதிப்பு நேற்றைவிட இன்று அதிகரிப்பு!

தமிழ்நாட்டில் இன்று கொரோனா தொற்றால் 1,243 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் நோய்த்தொற்றால் எட்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. இன்று கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பின் எண்ணிக்கை 1,243 பேராக அதிகரித்துள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 8,65,693 ஆக உள்ளது. மேலும் இன்று சிகிச்சைப் பலனின்றி எட்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

நோய்த்தொற்றிலிருந்து சிகிச்சைப் பெற்று குணமடைந்தோரின் எண்ணிக்கை 634 ஆக பதிவாகியிருக்கிறது. தொற்று பாதிப்பால் தற்போது வரை சிகிச்சைப் பெற்று வருபவர்களின் மொத்த எண்ணிக்கை 7,291 ஆக உள்ளது.

சென்னையில் மட்டும் 458 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் உட்பட மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 2,747 ஆக உள்ளது.

Advertisement:

Related posts

திருவேற்காடு கோயிலில் சசிகலா சாமி தரிசனம்!

Gayathri Venkatesan

ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதிபெற்ற தடகள வீரர் முரளி ஸ்ரீசங்கர்

Jeba

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு உரிய மரியாதை தரப்படுவதில்லை: நடிகை ரோஜா குற்றச்சாட்டு!

Saravana