நாடு முழுவதும் அனைத்து சுங்க சாவடிகளிலும் இன்று நள்ளிரவு முதல் பாஸ்டேக் அமலுக்கு வருவதாக மத்திய போக்குவரத்துத் துறை உறுதிபடத் தெரிவித்துள்ளது.
சுங்க சாவடி பரிமாற்றங்களை 100 சதவீதம் பணமில்லா பரிவர்த்தனைகளாக பெற தேசிய நெடுஞ்சாலை ஆணையம் இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. இதையடுத்து இன்று நள்ளிரவு முதல் சுங்க சாவடிகளில் பாஸ்டேக் கட்டாயமாக்கப்படுகிறது. இது குறித்து மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று நள்ளிரவு 12 மணி முதல் அனைத்து சுங்க சாவடிகளிலும் பாஸ்டேக் அமல்படுத்தப்பட உள்ளது என்று கூறப்பட்டுள்ளது. பாஸ்டேக் இல்லாமல் வரும் வாகனங்களுக்கு இரு மடங்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2017 ஆம் ஆண்டு டிசம்பர் 1 ஆம் தேதிக்கு முன்பு விற்பனை செய்யப்பட்ட கார்கள், பேருந்துகள், சரக்கு லாரிகள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களுக்கும் பாஸ்டேக் கட்டாயம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஸ்டேக் கட்டாயம் ஆக்கும் வகையில் 1989ஆம் ஆண்டின் மத்திய மோட்டார் வாகனங்களுக்கான விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் மேற்கொண்டது எனவும் அந்த அறிக்கையில் சுட்டிகாட்டப்பட்டுள்ளது. இந்த திருத்தம் மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சகத்தால் கடந்த ஆண்டு பாஸ்டேக் அமல்படுதுதவது இந்த முறை தள்ளி வைக்கப்படமாட்டாது என்றும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Advertisement: