தமிழகம் முக்கியச் செய்திகள்

இன்று ஒரே நாளில் தமிழகம் முழுவதும் 500க்கும் மேற்பட்ட வேட்பு மனுக்கள் தாக்கல்

தமிழகம் முழுவதும் இன்று ஒரேநாளில் 500க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

தமிழக சட்டப்பேரவைக்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, கடந்த 12ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. முதல் நாளில் தேர்தல் மன்னன் பத்மநாபன், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட 59 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். விடுமுறை தினம் என்பதால் 13, 14 ஆகிய தேதிகளில் வேட்புமனு தாக்கல் நடைபெறவில்லை.

இந்நிலையில், இன்று முகூர்த்த தினம் என்பதால், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர். இன்று ஒரேநாளில் தமிழகம் முழுவதும் 500க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

Advertisement:

Related posts

தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா வந்த 4 பேருக்கு உருமாறிய கொரோனா!

Niruban Chakkaaravarthi

சாதிவாரியான புள்ளி விவரங்களை சேகரிப்பது குறித்து ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு! – தமிழக அரசு அரசாணை

Nandhakumar

திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சிக்கு தொகுதி ஒதுக்கீடு

Saravana Kumar