இந்தியா முக்கியச் செய்திகள்

ஒரே நாளில் 147 பேர் உயிரிழப்பு; தமிழகத்தை அச்சுறுத்தும் கொரோனா!

தமிழகத்தில் ஒரே நாளில் 19,588 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் ஒரே நாளில் 147 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் ஒரே நாளில் 19,588 பேருக்குப் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 11,86,344 ஆக உள்ளது.

தமிழகத்தில் 2,28,13,859 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்றைய தினத்தில் கொரோனா சிகிச்சை முடிந்து 17,164 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன்மூலம் இதுவரை கொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்புவோரின் எண்ணிக்கை 10,54,746 ஆக உள்ளது.

ஒரே நாளில் 147 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14,193 ஆக உள்ளது.

சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 5,829 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் சென்னையில் மட்டும் இதுவரை 3,39,797 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்

Advertisement:

Related posts

தமிழகத்தில் 8 ஆயிரத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு!

Gayathri Venkatesan

பிரதமர் மோடிக்கு மன்மோகன் சிங் கடிதம்!

Karthick

’ரொம்ப ஏமாற்றமா இருக்கே?’: கொல்கத்தா அணி கேப்டன் சோகம்!

Karthick