செய்திகள் தமிழகம் முக்கியச் செய்திகள்

9 மாவட்டங்களில் சதம் அடித்த வெயில்: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் தரைக்காற்று வடமேற்கு திசையிலிருந்து வீசுவதால் மாநிலத்தில் 9 மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் சதம் அடித்துள்ளது. மேலும் தமிழகத்தில் வெப்ப சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் 100 டிகிரி ஃபாரன்ஹீட் தாண்டி மக்களை வாட்டி வதைத்துவருகிறது. ஆசுவாசமாக வீட்டில்கூட உட்கார முடியாமல் வெயிலின் உஷ்ணம் காணப்படுகிறது. நேற்று மட்டும் வேலூர்,திருத்தணி,திருச்சி, கரூர், மதுரை, ஈரோடு, தர்மபுரி, திருப்பத்தூர்,சேலம் உள்ளிட்ட பகுதிகளில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் தாண்டியது.

இந்நிலையில் தமிழகத்தில் இன்றும் நாளையும் சென்னை, காஞ்சிபுரம், வேலூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, சேலம், தர்மபுரி, திருச்சி, மதுரை, நாகப்பட்டினம்,கிருஷ்ணகிரி, நாமக்கல், தஞ்சை, சிவகங்கை, புதுக்கோட்டை, காரைக்கல் உள்ளிட்ட பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையானது இயல்பைவிட நான்கிலிருந்து ஆறு டிகிரி செல்சியல் வரை உயர்ந்து காணப்படும். இதன்காரணமாக வெயில் 100 டிகிரியை விட கூடுதலாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணிநேரத்தில் வெயிலின் தாக்கம் 100 டிகிரி ஃபாரன்ஹீட் இருக்கும். அதேபோல் வெப்பச்சலனம் காரணமாக இன்று முதல் வரும் 7-ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன்கூடிய லேசான மழை பெய்யக்கூடும். சென்னை உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் இன்று காலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதன்காரணமாக வெயிலின் தாக்கம் குறைந்துகாணப்பட்டது.

Advertisement:

Related posts

கேரள காங்கிரசின் முன்னாள் எம்.பி கட்சியிலிருந்து விலகல்!

Karthick

புதிய தொழில் கொள்கைக்கு நன்றி தெரிவித்த டான்சியா!

Niruban Chakkaaravarthi

மாணவர்களுக்கு விலையில்லா டேட்டா கார்டு: முதல்வர் அதிரடி அறிவிப்பு

Niruban Chakkaaravarthi