செய்திகள் தமிழகம் தேர்தல் 2021 முக்கியச் செய்திகள்

தமிழகத்தில் 71.79% வாக்குப்பதிவு!

தமிழகத்தில் நடந்து முடிந்த 16-வது சட்டப் பேரவைக்கான வாக்குப்பதிவில் மொத்தம் 71.79% பதிவாகியுள்ளது. வாக்குப்பதிவின் முழுமையான விவரம் நாளை தெரியவரும் என தமிழக தேர்தல் ஆணையர் சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளுக்குமான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 7 மணி வரை நடைபெற்றது. மாலை 6 மணிக்கு மேல் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதுகுறித்து தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த தமிழக தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு பேசுகையில், “தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் மாலை 7 மணி நிலவரப்படி 71.79 % வாக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வாக்குப்பதிவின் முழுமையான எண்ணிக்கை நாளை கிடைக்கும். அப்போது ஆண் வாக்காளர்கள் எண்ணிக்கை, பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை, திருநங்கைகள் என வாக்குப்பதிவு செய்தவர்களின் விவரங்கள் அனைத்தும் முழுமையாக கிடைக்கப்பெறும்.
மாநிலத்தில் அதிகபட்சமாக நாமக்கல்லில் 77.91% வாக்குப்பதிவுச் செய்யப்பட்டுள்ளது. அரியலூரில் 77.88% வாக்குப்பதிவானது, சென்னையில் 59.40%, செங்கல்பட்டில் 62.77% வாக்குப்பதிவுச் செய்யப்பட்டது.


வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் சிசிடிவி பொருத்தப்பட்டுக் கண்காணிக்கப்படும். இந்த தேர்தலில் பெரியளவு அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறவில்லை. தேர்தல் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது. சில இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் கோளாறு எழுந்தன, ஆனால் அவை சரிசெய்யப்பட்டது.


வரும் மே 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். இதற்காக 75 வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது” என அவர் கூறினார்.

Advertisement:

Related posts

ஒரே நாளில் 62,258 பேர் கொரோனாவால் பாதிப்பு!

Jeba

டெல்லி போராட்டம் குறித்து ஐநா மனித உரிமைகள் ஆணையம் கருத்து!

Nandhakumar

2-ம் தவணை கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்ட துணை குடியரசு தலைவர்!

Saravana Kumar