செய்திகள் தமிழகம் தேர்தல் 2021 முக்கியச் செய்திகள்

அழகர் அணைத் திட்டம் செயல்படுத்தப்படும்: டிடிவி தினகரன்

அழகர் அணைத் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்ரீவில்லிப்புத்தூரில் பரப்புரை மேற்கொண்ட அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் உறுதி அளித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அமமுக வேட்பாளர் சங்கீத பிரியாவை ஆதரித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், ஸ்ரீவில்லிபுத்தூர் மக்களின் நீண்டநாள் கோரிக்கையான அழகர் அணைத் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

பல ஆண்டுகளாக பூட்டிக் கிடக்கும் கூட்டுறவு நூற்பாலையை மீண்டு இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்தார். இதன் வாயிலாக 2000 குடும்பங்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும் என்றும் அவர் கூறினார். சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு செல்லும் வழியில் பாலம் கட்டித் தரப்படும் எனவும் டி.டி.வி.தினகரன் உறுதி அளித்தார்.

Advertisement:

Related posts

பெற்றோர் கண்டித்ததால் சிறுவன் உயிரிழந்த பரிதாபம்!

Jeba

“கூட்டணி குறித்து விஜயகாந்த் முடிவெடுப்பார்” – பிரேமலதா விஜயகாந்த்

Jayapriya

“வக்கீல் சாப்” திரைப்படத்தின் ட்ரைலருக்கு முந்தியடித்த ரசிகர்கள்!

Jeba