செய்திகள் தமிழகம் தேர்தல் 2021 முக்கியச் செய்திகள்

தமிழகத்தில் 9 மணி நிலவரப்படி 13.80 சதவீத வாக்குப்பதிவு!

தமிழக சட்டப்பேரவைக்கான வாக்குப்பதிவு இன்று காலை முதலே விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில் காலை 9 மணி நிலவரப்படி தமிழகத்தில் 13.80 சதவீத வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளதாகத் தமிழக தேர்தல் ஆணையர் சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய சத்ய பிரதா சாகு “தமிழகத்தில் அதிகபட்சமாகத் திண்டுக்கல் மாவட்டத்தில் 20.23% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. குறைந்தபட்சமாகத் திருநெல்வேலியில் 9.98% வாக்குப்பதிவு நடந்துள்ளது. தலைநகர் சென்னையில் 10.58% வாக்குப்பதிவு நடந்துள்ளது.
மாநிலத்தில் மற்ற மாவட்டங்களைப் பொறுத்தவரையில் தருமபுரியில் 15.29 %, திருவண்ணாமலையில் 14.97 %, விழுப்புரத்தில் 14.21%, சேலத்தில் 15.76 %, நாமக்கல் 16.55 %, நீலகிரியில் 12.39, ஈரோட்டில் 13.97%, கோவையில் 14.65%, கரூரில் 16.46% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

புதுச்சேரி பிரதேசத்தில் 9 மணி நிலவரப்படி 14.42% வாக்குப்பதிவு நடந்துள்ளது. பொதுமக்கள் தங்களுடைய வாக்கினை ஆர்வமுடன் செலுத்திவருகிறார்கள். இந்த வாக்கு எண்ணிக்கை மாலைக்குள் மேலும் உயரக்கூடும்” என அவர் தெரிவித்தார்.

தமிழகத்தில் கடந்த 2016-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் 73.76% வாக்குகள் பதிவானது குறிப்பிடத்தக்கது.

Advertisement:

Related posts

சாலை பணி முறைகேட்டால் தனியார் நிறுவனத்தில் சோதனை: ரூ.20 கோடி மோசடி?

Gayathri Venkatesan

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் மலர்ந்த காதல்: வாடிவாசலில் திருமணம்

Niruban Chakkaaravarthi

திமுகவுடனான பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்தது: முத்தரசன் தகவல்!

Karthick