செய்திகள் தமிழகம் தேர்தல் 2021 முக்கியச் செய்திகள்

இறுதிகட்டத்தை அடைந்த தமிழக தேர்தல்: கவனம் ஈர்க்கப்படும் முக்கிய தலைவர்கள்!

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தலின் இறுதிகட்ட பரப்புரை இன்றுடன் நிறைவடைகிறது. தமிழகத்தில் அதிமுக, திமுக, மக்கள் நீதி மய்யம், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் மற்றும் நாம் தமிழர் கட்சி என ஐந்து முனை போட்டியாக தமிழக சட்டப்பேரவை தேர்தல் களம் கண்டுள்ளது. இந்நிலையில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுவந்த முக்கிய தலைவர்கள் இன்று தாங்கள் போட்டியிடும் தொகுதிகளில் இறுதிகட்ட பரப்புரையை ஈடுபடவுள்ளனர்.


அதிமுக சார்பில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தன்னுடைய சொந்த தொகுதி எடப்பாடியில் இறுதிகட்ட தேர்தல் பரப்புரையில் ஈடுபடுகிறார். இதற்காக எடப்பாடி தொகுதியில் பரப்புரைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தன்னுடைய இறுதிகட்ட பரப்புரையில் முதல்வர் பழனிசாமியின் தேர்தல் பரப்புரை வாதங்கள் முக்கியமாக கவனிக்கப்படுகிறது. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தொகுதியில் தன்னுடைய இறுதிகட்ட பரப்புரையில் ஈடுபடுகிறார்.


அதேபோல் சென்னை கொளத்தூரில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இறுதிகட்ட தேர்தல் பரப்புரை மேற்கொள்ளவுள்ளார். இதற்காக கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தேர்தல் பரப்புரைக்கான ஏற்பாடுகளில் தொண்டர்கள் ஈடுபட்டுள்ளனர். காட்பாடி தொகுதியில் போட்டியிடும் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் இறுதிகட்ட பரப்புரை மேற்கொள்கிறார். அதேபோல் சேப்பாக்கம் தொகுதியில் முதன் முறையாக போட்டியிடும் உதயநீதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார்.

தாராபுரம் தொகுதியில் பாஜக மாநில தலைவர் எல். முருகன் தேர்தல் பரப்புரையில் ஈடுபடுகிறார். பாஜக சார்பில் முதல் முறையாக தமிழக சட்டப்பேரவையில் காரைக்குடி தொகுதியில் போட்டியிடும் ஹெச். ராஜா, அரவங்குறிச்சியில் தொகுதியில் அண்ணாமலை, ஆயிரம் விளக்கு தொகுதியில் நடிகை குஷ்பு, கோவை தெற்கு தொகுதியில் வானதி சீனிவாசன் ஆகியோர் தங்களுடைய இறுதிகட்ட தேர்தல் பரப்புரையில் மும்முரமாக ஈட்டுப்பட்டுள்ளனர்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் டிடிவி தினகரன் கோவில்பட்டியில் தன்னுடைய இறுதிகட்ட தேர்தல் பரப்புரையைத் தொடங்கியுள்ளார். அதேபோல் தமிழக சட்டப்பேரவையில் முதல் முறையாக களம் காணுகிறார்கள் மக்கள் நீதி மய்யம் கட்சியினர். இக்கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் தன்னுடைய இறுதிகட்ட பரப்புரையில் ஈடுபடுகிறார். மயிலாப்பூர் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் நடிகை ஸ்ரீபிரியா தன்னுடைய இறுதிகட்ட தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். விருதாச்சலம் தொகுதியில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று இறுதிகட்ட தேர்தல் பரப்புரையில் ஈடுபடுகிறார். திருவற்றியூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இறுதிகட்ட பரப்புரை மேற்கொள்கிறார்.

இறுதிகட்ட தேர்தல் பரப்புரையில் அரசியல் கட்சிகளின் முக்கிய தலைவர்கள் மற்றும் நட்சத்திர வேட்பாளர்கள், கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் இன்று தங்களுடைய கடைசிகட்ட பரப்புரையை மேற்கொள்கிறார்கள். இதன்காரணமாகத் தமிழகத்தில் இன்று தேர்தல் பரப்புரை உச்சநிலையை அடைந்துள்ளது. இன்று மாலை 7 மணிக்கு அனைத்து வேட்பாளர்களும் தங்களுடைய தேர்தல் பரப்புரையை நிறைவு செய்யவேண்டும் என தமிழக தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement:

Related posts

“திமுகவின் தேர்தல் பரப்புரை அவதூறு செய்வதையே நோக்கமாகக் கொண்டிருக்கிறது” : முதல்வர் பழனிசாமி

Karthick

தமிழகத்தில் 9 மணி நிலவரப்படி 13.80 சதவீத வாக்குப்பதிவு!

L.Renuga Devi

கர்ணன் பேசும் அரசியல் சரியா?

Jeba