செய்திகள் தமிழகம் தேர்தல் 2021 முக்கியச் செய்திகள்

ஜனநாயக கடமையாற்றிய தமிழிசை செளந்தரராஜன்!

சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தெலுங்கான, புதுச்சேரி ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தன்னுடைய வாக்கினை செலுத்தினார்.


தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் இன்று வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்றுவருகிறது. அரசியல் கட்சி தலைவர்கள், திரை பிரபலங்கள், முதியவர்கள், முதல் முறை வாக்காளர்கள் என பொதுமக்கள் அனைவரும் தங்களுடைய ஜனநாயக கடைமையை ஆற்றிவருகிறார்கள்.


பரபரப்பாக வாக்குப்பதிவு நடைபெற்றுவரும் தலைநகர் சென்னையில் திமுக தலைவர் ஸ்டாலின், நடிகர்கள் ரஜினிகாந்த், அஜித், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் தங்களுடைய வாக்கினைச் செலுத்திவருகிறார்கள். பொதுமக்களுக்கும் தங்களுடைய ஜனநாயக கடமையாற்றவேண்டும் என தலைவர்கள் வலியுறுத்திவருகிறார்கள்.

தெலுங்கான, புதுச்சேரி ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தன்னுடைய வாக்கினை சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் கணவர் செளந்தரராஜனுடன் வரிசையில் நின்று வாக்கு செலுத்தினார்.

Advertisement:

Related posts

வீணாகும் காய் கனிகளிலிருந்து தயாரிக்கப்படும் இயற்கை எரிவாயு!

Jeba

உலக தண்ணீர் தினம் 2021: அறிந்ததும்.. அறியாததும்..

Ezhilarasan

சீரம் நிறுவனத்தில் திடீர் தீ: கொரோனா தடுப்பூசிகளின் நிலை?

Saravana