செய்திகள் தமிழகம் தேர்தல் 2021 முக்கியச் செய்திகள்

தமிழக தேர்தலில் 3-ஆயிரத்துக்கு மேற்பட்டோர் போட்டி!

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் 3 ஆயிரத்து 998 பேர் போட்டியிடுவதாகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

தமிழக தேர்தல் தொடர்பாக நிரூபர்களை நேற்று சந்திக்க அவர், தமிழக சட்டப்பேரவை தேர்தலில் 3 ஆயிரத்து 998 பேர் போட்டியிடுவதாக இதில், 3 ஆயிரத்து 585 பேர் ஆண்கள் என்றும், 411 பேர் பெண்கள் என்றும் தெரிவித்தார். மூன்றாம் பாலினத்தவர் 2 பேர் தேர்தலில் போட்டியிடுவதாகவும் அவர் தெரிவித்தார். மொத்தமுள்ள 88 ஆயிரத்து 937 வாக்குச் சாவடிகளில் மிகப் பதற்றமானவையாக 300 வாக்குச் சாவடிகளும் பதற்றமானவையாக 10 ஆயிரத்து 528 வாக்குச் சாவடிகளும் கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். வேட்பாளர்கள் மற்றும் கட்சிகளுடன் ஆலோசித்த பிறகு, பதற்றமான பகுதிகளில் தேர்தல் பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.


மேலும் புதிய வாக்காளர்களுக்கு வரும் 30- ம் தேதிக்குள் விரைவுத் தபாலில் வாக்காளர் அடையாள அட்டை அனுப்பப்படும். 44,758க்கும் அதிகமான வாக்குச்சாவடிகளில் கண்காணிப்புக் கேமராக்கள் மூலம் நேரலையாகக் காட்சிகள் பெறப்படும். பணப்பட்டுவாடா நடைபெறும் பகுதிகளில் அடுத்தகட்ட நடவடிக்கை தேர்தல் ஆணையம் எடுக்கும் என தலைமைத்தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

Advertisement:

Related posts

”குடிமராமத்து பணி: இணையத்தில் வெளியிடுக”- உயர்நீதிமன்ற மதுரைக்கிளை!

Jayapriya

புதுச்சேரி ஜிப்மரில் வரும் 15ம் தேதி முதல் வெளிநோயாளிகள் பிரிவு மூடல்

Saravana Kumar

குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,500: அதிமுக வாக்குறுதி!

Ezhilarasan