தமிழகம் தேர்தல் 2021 முக்கியச் செய்திகள்

தமிழகத்தின் 3-வது பெரிய கட்சியாக உருவெடுக்கும் நாம் தமிழர்!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக, திமுக என இருபெரும் கட்சிகளின் கூட்டணி வேட்பாளர்களே வெற்றிபெற்றுள்ளனர். இச்சூழலிலும் நாம் தமிழர் கட்சி தனக்கான தனி இடத்தை பிடித்துள்ளது. வாக்கு சதவீதத்தின் அடிப்படையில் நாம் தமிழர் கட்சி மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது.

தமிழகத்தின் 16-வது சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான மதசார்பற்ற கூட்டணி, அதிமுக தலைமையிலான கூட்டணி, கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கூட்டணி, டிடிவி தினகரன் தலைமையிலான அமமுக, தேமுதிக கூட்டணி, நாம் தமிழர் என இம்முறை ஐந்துமுனை போட்டியாக அமைந்தது.

தனித்து போட்டியிட்ட நாம் தமிழர்

மற்ற பிரதான கட்சிகள் அனைத்தும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்த நிலையில் இத்தேர்தலில் 234 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி தனித் போட்டியிட்டது. மற்ற கட்சிகளில் பெண் வேட்பாளர்களுக்கு குறைவான இடங்களை ஒதுக்கப்பட்டிறுந்தது. நாம் தமிழகர் கட்சி இத்தேர்தலில் பெண்களுக்கு சரிபாதியாக 117 தொகுதிகளை ஒதுக்கியது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

தமிழக அரசியல் களத்தில் நாம் தமிழகர் கட்சி பெற்ற வாக்கு சதவீதத்தையும், மக்கள் மத்தியில் அக்கட்சியின் அரசியல் அங்கீகாரம் எந்தளவுக்கு உயர்ந்துள்ளது என்பதை இங்கே பார்க்கலாம்.

கடந்த 2010-ம் ஆண்டு தொடங்கப்பட்ட நாம் தமிழர் கட்சி 2016-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போதே 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டு 1.07% வாக்குகளைப் பெற்று ஒன்பதாம் இடத்தில் இருந்தது. பின்னர் 2017-ம் ஆண்டு ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தனித்து போட்டியிட்டு 2.15% சதவிகிதத்துடன் நான்காம் இடத்தை பிடித்தது.

2019-ம் ஆண்டு தமிழகத்தில் 22 தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு 3.15% வாக்குகளை பெற்றது. அதேபோல் கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிட்டு 3.9% வாக்குகளை பெற்றது.

இந்த நிலையில் 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் 5 முனை போட்டி நிலவியது. இதில் நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்து களமிறங்கியது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்ற நிலையில் 234 தொகுதியிலும் தனித்து போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி, பெரும்பாலான தொகுதிகளில் அதிமுக, திமுக கூட்டணிக்கு அடுத்த இடத்தை பிடித்துள்ளது.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கினைப்பாளர் சீமான் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிட்ட 37-ஆயிரம் வாக்குகளை பெற்று தோல்வியை சந்தித்தார். இவரை எதிர்த்துபோட்டியிட்ட திமுக வேட்பாளர் கே.பி. சங்கர் வெற்றிபெற்றுள்ளார். இரண்டாம் இடத்தை பெற்றுள்ள அதிமுக வேட்பாளர் கே.குப்பன் பெற்றுள்ளார்.

தமிழகத்தின் 3-வது பெரிய கட்சி

சீமான் வெற்றிபெறுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் தோல்வியை சந்தித்துள்ளார். இருந்தபோதிலும் தமிழகத்தில் 178 தொகுதிகளில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் 3-வது இடத்தை பிடித்துள்ளனர்.

நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் நடந்துமுடிந்த தேர்தலில் ஒரு தொகுதியில் கூட வெற்றிபெறவில்லை என்றாலும் வாக்கு சதவீதத்தின் அடிப்படையில் தமிழகத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக அக்கட்சி வளர்ந்துள்ளது.

தமிழகத்தில் பிரதான கட்சிகளாக திமுக, அதிமுக தொடர்கிறது. காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, மதிமுக, பாஜக, தேமுதிக உள்ளிட்ட முக்கிய கட்சிகள் உள்ள நிலையில், குறுகியகாலகட்டத்திலேயே நாம் தமிழர் கட்சியின் அசுர வளர்ச்சி கண்டுள்ளது. இதன் மூலம் தமிழக அரசியல் பாதையை நாம் தமிழர் தன் பக்கம் ஈர்த்துள்ளது என்பது கவனிக்கத்தகுந்த விஷயமாகும்.

Advertisement:

Related posts

ரூ.30,000க்கும் குறைவான விலையில் கிடைக்கும் சிறந்த நான்கு ஸ்மார்ட்ஃபோன்கள்!

Jayapriya

நாய்களின் இருப்பிடமாக மாறிய உ.பி அரசு மருத்துவமனை: மெத்தையில் உல்லாச உறக்கம்!

Saravana

இந்தியாவுக்கு நிதி உதவி அளிக்க கோரிக்கை வைத்த ஹாலிவுட் நடிகர்!

Jeba