செய்திகள் தமிழகம் தேர்தல் 2021 முக்கியச் செய்திகள்

திருப்பத்தூரில் அரசு மருத்துவக்கல்லூரி:ஸ்டாலின்

புதியதாக உருவாக்கப்பட்ட திருப்பத்தூர் மாவட்டத்தில் மாணவர்கள் மருத்துவ கல்வி படிக்க திமுக ஆட்சி அமைத்தவுடன் அரசு மருத்துவக்கல்லூரி உருவாக்கப்படும் என திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

திருப்பத்தூர் வாணியம்பாடி ஆம்பூர் ஜோலார்பேட்டை தொகுதி வேட்பாளர்களுக்காக இன்று தேர்தல் பரப்புரையில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசியதாவது, “ திருப்பத்தூர் பகுதியில் திமுக கூட்டணியில் வேட்பாளர்களை ஆதரித்து உங்கள் ஸ்டாலின் உங்கள் வீட்டுப்பிள்ளை வந்திருக்கிறேன். அதிமுக ஆட்சியில் உள்ள அமைச்சர்கள் கரப்ஷன் கலெக்ஷன் கமிஷன் ஆகியவற்றில்தான் மும்முரமாக செயல்பட்டுவருகிறார்கள்.


நாடு முழுவதும் சிறுபான்மை மக்கள் அவதிப்படுவதற்குக் காரணம் பாமக அதிமுக கட்சிகள்தான் காரணம். முத்தலாக் தடை சட்டத்தில் எதிராக திமுக நாடாளுமன்றத்தில் வாக்களித்தது. ஆனால் தற்போது தேர்தல் நேரத்தில் சிறுபான்மை மீது அக்கறை உள்ளது போல் பேசும் அதிமுக பாமக கட்சிகள் நாடாளுமன்றத்தில் முத்தலாக் தடை சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.

திமுக ஆட்சிக்கு வந்தால் கோயில்களைப் பாதுகாக்க 25 ஆயிரம் இளைஞர்கள் பணி வழங்கப்படும். வாணியம்பாடியில் உள்ள சந்தன ஆலை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சி சுற்றுலா தளம் ஆக்கப்படும். நாட்றம்பள்ளி மற்றும் திருப்பத்தூரில் அரசு மருத்துவக்கல்லூரி கொண்டுவரப்படும் என தேர்தல் பரப்புரையில் திமுக தலைவர் ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார். பின்னர் வாணியம்பாடி பகுதியில் நடந்து சென்று பொது மக்களிடம் வாக்கு சேகரித்தார்.

Advertisement:

Related posts

அதிமுகவில் 12 இடங்களை கோரும் தமாகா!

Gayathri Venkatesan

மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் எம்.சி சம்பத் சவால்

Nandhakumar

புயல், மழைவெள்ளப் பாதிப்பு: புதுச்சேரியில் இன்று மத்திய குழுவினர் ஆய்வு!

Dhamotharan