தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக சார்பில் சேலம் ஆத்தூர் (தனி)தொகுதிக்கு அறிவிக்கப்பட்ட ஜீவா ஸ்டாலினுக்கு மாற்றாக கு.சின்னத்துரை என்பவர் வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக தேர்தலில் 173 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியலை சில தினங்களுக்கு முன்பு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
அதில் சேலம் ஆத்தூர் (தனி) தொகுதி வேட்பாளராக ஜீவா ஸ்டாலின் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று திடீரென ஆத்தூர் தனித் தொகுதியில் வேட்பாளாராக அறிவிக்கப்பட்ட ஜீவா ஸ்டாலினுக்கு பதில் மாற்று வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். அந்த தொகுதியில் கு.சின்னத்துரை என்பவர் திமுக வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளதாக கட்சித் தலைமை அறிவித்துள்ளது.