செய்திகள் தமிழகம் தேர்தல் 2021 முக்கியச் செய்திகள்

பாஜகவின் வெற்றி அதிமுகவுக்குதான் பாதிப்பு: கே.பாலகிருஷ்ணன்

தமிழக தேர்தலில் 234 தொகுதிகளிலும் மதசார்பற்ற கூட்டணி வெற்றி பெறும் எனவும் தப்பித் தவறி பாஜக ஒன்றிரண்டு இடங்களில் வெற்றிபெற்றுவிட்டால் அது திமுகவை விட அதிமுகவிற்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை சைதாப்பேட்டை தொகுதி திமுக வேட்பாளர் மா. சுப்பிரமணியனை ஆதரித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், குடியுரிமை சட்டத்தை ஆதரித்த ஒரே கட்சி அதிமுகதான். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா எதிர்த்த திட்டங்களுக்கு எடப்பாடி பழனிசாமி அனுமதி கொடுத்தவர்.

நடைபெறும் தேர்தலில் 234 தொகுதிகளிலும் மதசார்பற்ற கூட்டணி வெற்றி பெறும் எனவும் தப்பித் தவறி பாஜக ஒன்றிரண்டு இடங்களில் வெற்றிபெற்றுவிட்டால் அது திமுகவை விட அதிமுகவிற்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும். திமுக கூட்டணி தேர்தலுக்காக உருவாக்கப்பட்ட கூட்டணி அல்ல மக்களை பாதுகாக்க உருவாக்கப்பட்ட கூட்டணி.

அதிமுக – பாஜக கூட்டணி எதிரும் புதிருமாகக் கலங்கி போயிருக்கிறது. அதிமுக ஆட்சியில் இருக்கிறது ஆனால் ஆட்சிக்கு வந்தால் ரூ. 1,500 கொடுக்கிறோம் என்கிறார் ஆனால் இப்போது ஏன் கொடுக்கவில்லை அதிமுகவின் தேர்தல் அறிக்கை அவர்கள் பத்து வருடமாக எதுவும் செய்யவில்லை என்பதை காட்டுகிறது. ஆட்சியிலிருந்தபோது இதெல்லாம் செய்யாமல், மீண்டும் வந்தால் செய்வோம் என்பது கபட நாடகம்” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Advertisement:

Related posts

அனைவருக்கும் கொரோனா தடுப்பு மருந்து வழங்குவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை; மத்திய அரசு தகவல்!

Dhamotharan

டீ விற்பனையில் புதிய யுக்தி; மாதந்தோறும் ரூ. 2 லட்சம் சம்பாதிக்கும் இளைஞர்!

Jayapriya

நன்னிலம் தொகுதி எனக்கு கிடைத்தது பெரிய பாக்கியம்: அமைச்சர் காமராஜ்!

Karthick