தமிழகம் முக்கியச் செய்திகள்

அடுத்தமுறை காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் கூட கிடைக்காது ப. சிதம்பரம் பேச்சு

கட்சி நிர்வாகிகளின் நடவடிக்கையால் அடுத்தமுறை காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் கூட கிடைக்காது என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் வேதனை தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் பூத் கமிட்டி கூட்டத்தில் அவர் இவ்வாறு பேசினார்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் பூத் கமிட்டி கூட்டத்துக்கு கட்சியின் முக்கிய நிர்வாகிகள் வராததால், நிகழ்ச்சிக்குத் தலைமையேற்ற காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் அதிருப்தியடைந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, கூட்டத்தில் பேசிய ப.சிதம்பரம், கிடைக்காத தொகுதி வேண்டும் என காங்கிரஸ் நிர்வாகிகள் சண்டை போடுவதாகவும், கிடைத்த தொகுதியில் வேலை செய்வதற்கு நிர்வாகிகள் முழுமையாக வருவதில்லை எனவும் வேதனை தெரிவித்தார். இதே நிலை நீடித்தால், அடுத்த தேர்தலுக்கான கூட்டணியில், காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் கூட கிடைக்காது என ப.சிதம்பரம் வேதனை தெரிவித்தார்.

Advertisement:

Related posts

சட்டமன்ற தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி தனிச்சின்னத்தில் போட்டி: சரத்குமார்

Saravana

எமதர்ம ராஜ வேடத்தில் கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்திய நபர்!

Karthick

ஷேர் சாட் நிறுவனத்தை விழுங்கும் ட்விட்டர்?

Karthick