தமிழகம் முக்கியச் செய்திகள்

சென்னையில் 307 பதற்றமான வாக்குச்சாவடிகள்!

சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 307 பதற்றமான வாக்குச்சாவடிகள் இருப்பதாக மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.


சென்னையில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்படும் பாதுகாப்பு மையங்களில் மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் ஆய்வு செய்தார் . பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மகேஷ்குமார் அகர்வால், வாக்குபதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை மிக தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாக கூறினார். உரிமத்துடன் துப்பாக்கி வைத்திருப்பவர்கள், அதனை காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளதாக தெரிவித்த அவர், சென்னையில் ஆயிரத்து 300 ரவுடிகளை கைது செய்துள்ளதாக கூறினார். சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் 307 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்றும், 10 வாக்குச்சாவடிகள் மிகப்பதற்றமானவை என்றும் மகேஷ்குமார் அகர்வால், தெரிவித்தார்.

Advertisement:

Related posts

புதுச்சேரி முன்னாள் எம்எல்ஏ லட்சுமிநாராயணன், என்.ஆர்.காங்கிரசில் இணைந்தார்

Jeba

அம்மா மினி கிளினிக் திட்டத்திற்காக புதிதாக 2,000 மருத்துவர்கள் விரைவில் நியமனம்! – அமைச்சர் விஜயபாஸ்கர்

Nandhakumar

டெல்லி மாநகராட்சி தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி!

Jeba