செய்திகள் தமிழகம் முக்கியச் செய்திகள்

3 தொகுதிகளுக்கான பாஜக வேட்பாளர்கள் இன்று அறிவிப்பு

தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் 17 பேர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில் உதகை, தளி மற்றும் விளவங்கோடு ஆகிய மூன்று தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்பட உள்ளனர்.

அதிமுக கூட்டணியில் பாஜக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதில் 17 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டது. தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் பாஜக நட்சத்திர வேட்பாளர்களான பாஜக மாநில தலைவர் எல். முருகன் தாராபுரம் (தனி), வானதி சீனிவாசன் கோவை தெற்கு, நடிகை குஷ்பு ஆயிரம் விளக்கும், எச்.ராஜா காரைக்குடி, அண்ணாமலை அரவக்குறியிச்சில் போட்டியிடுகிறார்கள்.

இந்நிலையில் அறிவிக்கப்படாமல் உள்ள உதகை, தளி மற்றும் விளவங்கோடு தொகுதிகளில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்பட உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று உதகை சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளருக்கான நேர்காணலை தமிழக மேலிட பொறுப்பாளர் சி.டி. ரவி நடத்தினார். இதையடுத்து குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என மத்திய அரசை அதிமுக வலியுறுத்தும் எனத் தேர்தல் அறிக்கையில் கூறியிருப்பது பற்றி கருத்து தெரிவித்த சி.டி.ரவி, குடியுரிமை திருத்த சட்டம் குறித்து அதிமுகவிற்குள் குழப்பம் இருப்பதாகவும் அதனை தெளிவுபடுத்துவோம்” என தெரிவித்தார்.

Advertisement:

Related posts

பிரேசிலில் 4வது முறையாக மாற்றப்பட்ட சுகாதாரத்துறை அமைச்சர்

Saravana Kumar

“நாங்கள் அரசியல்வாதிகள் அல்ல புரட்சிவாதிகள்” – சீமான்!

Karthick

போலியோ சொட்டு மருந்து முகாம் ஒத்திவைப்பு!

Saravana