செய்திகள் தமிழகம் தேர்தல் 2021 முக்கியச் செய்திகள்

ஈரோடு – பழனி ரயில் திட்டம் அமைக்கப்படும்: எல். முருகன்

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தாம் வெற்றி பெற்றவுடன் ஈரோடு முதல் பழனி வரையிலான ரயில் திட்டம் மற்றும் அரசு மருத்துவ மற்றும் கலைக்கல்லூரி உள்ளிட்ட திட்டங்களை நிறைவேற்றுவேன் என தாராபுரம் பாஜக வேட்பாளர் எல்.முருகன் உறுதி அளித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 10 நாட்களாகத் தொடர் தேர்தல் பரப்புரையில் எல். முருகன் ஈடுபட்டு வருகிறார். தாராபுரம் உழவர் சந்தையில் விவசாயிகள் மற்றும் வியாபாரிகளைச் சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் அவர், இந்த பகுதியில் அதிகம் விளையக்கூடிய முருங்கைக்காய், பவுடர் ஏற்றுமதி தொழிற்சாலை, காய்கறிகள் குளிர்சாதன கிடங்கு உள்ளிட்ட திட்டங்கள் நிறைவேற்றித் தரப்படும். அதேபோல் ஈரோடு முதல் பழனி வரையிலான ரயில் திட்டம் மற்றும் அரசு மருத்துவ மற்றும் கலைக்கல்லூரி உள்ளிட்ட திட்டங்களை நிறைவேற்றுவேன் அதிமுக கூட்டணிக் கட்சிகளுடைய இரட்டை இலைச், தாமரை ஆகிய சின்னங்களில் பொது மக்கள் வாக்களிக்கவேண்டும் என எல்.முருகன் உறுதி கூறினார்.

Advertisement:

Related posts

பென்னிகுவிக் பிறந்த தினம்: ஓபிஎஸ் மரியாதை

Niruban Chakkaaravarthi

தியேட்டர் இருக்கை பிரச்னை: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை பாராட்டு!

Nandhakumar

மு.க. ஸ்டாலின் வேட்புமனுத் தாக்கல்!

Gayathri Venkatesan