தமிழகம் தேர்தல் 2021 முக்கியச் செய்திகள்

கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றிய அரசு அதிமுக: ஓ.பி.எஸ் பெருமிதம்

தமிழகத்தில் கடந்த பத்தாண்டுகளில் அதிமுக தலைமையிலான அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளதாக போடிநாயக்கனூர் தொகுதியில் தேர்தல் பரப்புரை தொடங்கிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் தொகுதியில் மூன்றாவத முறையாக போட்டியிடும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று அரண்மனை புதூரில் தேர்தல் பரப்புரையை தொடங்கினார்.


முல்லை நகர், கோட்டைப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வாக்குசேகரிப்பில் ஈடுபட்ட அவர், “ கடந்த 10 ஆண்டுகளில் போடிநாயக்கனூர் தொகுதியில் அடிப்படை வசதிகளை உங்களின் மனம் நிறைவு பெறும் வகையில் நான் நிறைவேற்றியுள்ளேன். 18-ம் கால்வாய் திட்டம் மற்றும் நீட்டிப்பு, மேலும் கழக ஆட்சியில் பொறியியல், கால்நடை, கலை கல்லூரி, சட்டக்கல்லூரி, ஐ.டி.ஐ, பாலிடெக்னிக் என அனைத்து கல்லூரிகளையும் கொண்டு வந்து முழுமை பெற்ற கல்வி மாவட்டமாக தேனி மாவட்டம் திகழ்கிறது. புரட்சித் தலைவி அம்மா அவர்கள் ‘பெண்கள் நாட்டின் கண்கள்’ என்று பெண்களுக்காக மகப்பேறு நிதியுதவி, தாலிக்கு தங்கம், உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார். அவருடைய மறைவுக்கு பின் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அம்மா அரசு புரட்சித் தலைவி அம்மாவின் திட்டங்களை தொடர்ந்து முழுமையாக செயல்படுத்தி வருகிறார்.


மேலும் குடிமராமரத்து பணிகள் உள்ளிட்ட பணிகளால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்தியாவில் அனைத்து துறைகளிலும் தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்கிறது. திமுக ஆட்சியல் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ததில்லை ஆனால் அம்மா அரசு மக்களை பாதுகாப்பதிலும், இயற்கை பேரிடர் மற்றும் கொரோனா போன்ற நோய்களிலிருந்து காப்பதிலும் கழக அரசு சிறப்பாக செயல்பட்டது. இதற்காக பாரத பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தை சிறப்பாக செயல்பட்டதற்காக வெகுவாக பாராட்டினார். தற்போது தேர்தல் அறிக்கையில் 6 சிலிண்டர் இலவசம், பயிர் கடன் தள்ளுபடி, பெண்களின் பணிச்சுமையை குறைக்கும் வகையில் வாஷிங் மிஷன் தருவோம் என்று வாக்குறுதி அளித்துள்ளோம். நாங்கள் சொன்ன அனைத்தையும் நிறைவேற்றுவோம். கடந்த இரண்டு சட்டமன்ற தேர்தல்களில் போட்டியிட்ட என்னை வெற்றி பெற செய்தீர்கள். கடந்த தேர்தல்களில் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றியுள்ளேன் என்ற மன நிறைவோடு மூன்றாவது முறையாக நமது தொகுதியில் போட்டியிடும் எனக்கு புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி அம்மா ஆகியோர் கண்ட வெற்றி சின்னமாம் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து மகத்தான வெற்றியை தர வேண்டும்” என்றார்.

Advertisement:

Related posts

பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெமிங்-ன் பிறந்தநாளைக் கொண்டாடிய சிஎஸ்கே!

Karthick

இந்தியாவில் 2 கொரோனா தடுப்பூசிகளுக்கு அனுமதி; பிரதமர் மோடி பாராட்டு!

Jayapriya

அமெரிக்க அதிபரின் உரை ஆசிரியரானார் இந்திய வம்சாவளி நபர்!

Jayapriya